இந்தி பிக்பாஸ் நடிகை
இந்தி பிக்பாஸ் நடிகைமுகநூல்

திடீர் மாரடைப்பு... 42 வயதில் மரணமடைந்த இந்தி பிக்பாஸ் நடிகை!

இந்தி மொழியில் ஒளிபரப்பான ’பிக் பாஸ் 13 ’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஷெஃப்பாலி, நேற்றைய தினம் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என்ற அதிர்ச்சிகர செய்தி வெளியாகியுள்ளது.
Published on

கடந்த 2002-ம் ஆண்டு இசை வீடியோ ஆல்பமான ‘Kaanta Laga’ மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர், ஷெஃபாலி. தொடர்ந்து ‘முஜ்சே ஷாதி கரோகி’ என்ற படத்தில் சல்மான் கான் உடன் நடித்தார். 2019-ல் ‘பேபி கம் நா’ என்ற வெப் சீரிஸில் நடித்தார். நடன நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். தொடர்ந்து, இந்தி மொழியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 13 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார் ஷெஃப்பாலி.

இந்நிலையில், 42 வயதான அவர் நேற்று இரவு திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

நேற்றைய தினம் தனது மும்பை வீட்டில் இருந்தபோது இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரின் கணவர் பராக் தியாகி அந்தேரியில் உள்ள பிரபல பல்நோக்கு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும்வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக இன்று அதிகாலை 12.30 மணியளவில் கூப்பர் மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தி பிக்பாஸ் நடிகை
கொசு அளவில் புது ட்ரோன்.. சீனா கையில் எடுத்த ஐடியா.. விஞ்ஞானிகள் சொல்வதென்ன?

இதுகுறித்து, கூப்பர் மருத்துவமனையின் உதவி மருத்துவ அதிகாரி (AMO) கூறுகையில், ’உடல் வேறொரு மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டது. மேலும், பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகுதான் இறப்புக்கான சரியான காரணம் உறுதி செய்யப்படும். ’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மும்பை காவல்துறையினர் விசாரணைக்காக அந்தேரியில் உள்ள ஷெஃபாலியின் வீட்டிற்கு நள்ளிரவில் வந்தனர்.

தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் இருந்ததோடு , அவரது வீட்டை முழுமையாக சோதனை செய்தனர். மேலும், உடற்கூராய்வு செய்த பிறகுதான் மரணத்திற்கான காரணம் தெரியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

இந்தி பிக்பாஸ் நடிகை
தென்கொரியா | ஓடும் மெட்ரோ ரயிலில் தீ வைத்த நபர்.. பரபரப்பு காட்சிகள்!

இவ்வழக்கை சந்தேக மரணம் என்ற கோணத்திலேயே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com