தென்கொரியா
தென்கொரியாfb

தென்கொரியா | ஓடும் மெட்ரோ ரயிலில் தீ வைத்த நபர்.. பரபரப்பு காட்சிகள்!

தென் கொரிய தலைநகர் சியோலில், ஓடிக்கொண்டிருந்த மெட்ரோ ரயிலில் தீ வைத்த நபரால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
Published on

வோன் என்று அடையாளம் காணப்பட்ட அந்த 67 வயது நபர், மே 31 அன்று பரபரப்பு மிகுந்த காலை வேளையில் சியோல் மெட்ரோவில் ஏறியுள்ளார் அந்த நபர். தனது உடைக்குள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை வெளியே எடுத்து ரயிலுக்குள் ஊற்றி தீயை பற்ற வைத்தார். அந்த ரயில் பெட்டி முழுக்க தீ பரவுகிறது. இது பயணிகளிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. மேலும், பயந்துபோன சகப்பயணிகள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்குமாக ஓடுயுள்ளனர் .

ரயிலின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த பயங்கர காட்சிகள் பதிவாகியுள்ளன. 67 வயதான அந்த நபர், விவாகரத்தால் ஏற்பட்ட மனவேதனையால் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

உடனே ரயில் நிறுத்தப்பட்டு 300க்கும் மேற்பட்ட பயணிகள் விரைவாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் புகைமூட்டம் காரணமாக 20க்கும் மேற்பட்டோர் சுவாசக் கோளாறால் அவதிப்பட்டனர்.

தென்கொரியா
கொசு அளவில் புது ட்ரோன்.. சீனா கையில் எடுத்த ஐடியா.. விஞ்ஞானிகள் சொல்வதென்ன?

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக தீவைப்பு, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் குற்றம், தனிப்பட்ட பயங்கரவாத நோக்கம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், விவாகரத்து ஏற்பட்டதால் கோபமாக இருந்ததாகவும், சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் வாங்கியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார் .

தீ விபத்தால் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் பெட்டி சேதமடைந்தது. தென்கொரியாவில் இதேபோன்றதொரு சம்பவம் கடந்த 2003ஆம் ஆண்டு மெட்ரோ ரயிலில் நிகழ்ந்தது. அப்போதைய தீ விபத்தில் 192 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com