\
Rajinikanth Calls Soori After Watching ‘Mandadi’ Movie
SooriMandaadi

தமிழ் சினிமாவின் வைரம்! சூரியை உச்சிக்குக் கொண்டுபோன மாதவன்!

சூரியின் நடிப்பை பாராட்டிய நடிகர் மாதவன்: 'மண்டாடி' ஒரு வைரம்!
Published on: 
Summary

நடிகர் சூரியின் ‘மண்டாடி’ திரைப்படத்தைப் பார்த்த மாதவன், படத்தின் கதை, ஒளிப்பதிவு, மற்றும் நடிப்பை பாராட்டி, சூரியின் திறமையை புகழ்ந்துள்ளார். தமிழக கடலோரப் பகுதிகளின் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு உருவான இப்படம், சூரியின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது.

செய்தியாளர் - M.மீரா

நடிகர் சூரி நடிப்பில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ஆர். மாதவன், படக்குழுவினரைப் பாராட்டி சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான பதிவைப் பகிர்ந்துள்ளார். படத்தின் கதை, இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் நடிகர்களின் நடிப்பு என அனைத்தையும் பாராட்டியுள்ள அவர், சூரியை நினைத்துப் பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான ‘மண்டாடி’ திரைப்படம், தமிழகக் கடலோரப் பகுதிகளில் பாரம்பரியமாக நடைபெறும் பாய்மரப் படகுப் போட்டிகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றதுடன், சூரியின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாகவும் அமைந்துள்ளது.

mandaadi
mandaadimandaadi

சமீபத்தில் இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதையடுத்து படத்தைப் பார்த்த மாதவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் டிரெய்லரைப் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.

Rajinikanth Calls Soori After Watching ‘Mandadi’ Movie
ஜெயிலர் 2 | ‘பழக்கடை மூர்த்தி அண்ணே பயலுக..’ இந்திய அளவில் ட்ரெண்ட்டான ‘MOORTHY' கேரக்டர்!
Rajinikanth Calls Soori After Watching ‘Mandadi’ Movie
வெறும் 2 நாளில் 200 கோடி வசூல்! ரஜினியின் 1000 கோடி சம்பவம் ரெடி.. திரையில் மிரட்டும் ஜெயிலர் 2!

அதில், “தமிழ் சினிமாவின் மற்றொரு வைரம்! என்னவொரு திரைப்படம், என்னவொரு ஒளிப்பதிவு! நேர்த்தியான கதைசொல்லல், சிறப்பான இயக்கம், நடிகர்களின் அசாத்தியமான நடிப்பு என அனைத்தும் அருமை. எனது தம்பி சூரியை நினைத்துப் பெருமைப்படுகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாதவனின் இந்தப் பதிவு சூரியின் நடிப்புப் பயணத்திற்குக் கிடைத்த முக்கியமான பாராட்டாகப் பார்க்கப்படுகிறது.

வெளியான தகவல்களின்படி, ‘மண்டாடி’ திரைப்படம் உலகளவில் ரூ.136.68 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.101.92 கோடி நிகர வசூலைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் சூரியின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த படமாகவும் இது குறிப்பிடப்படுகிறது.

Madhavan
MadhavanG D Naidu

அக்டோபர் 8 முதல் நெட்ஃபிளிக்ஸில் பல மொழிகளில் இப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.

Rajinikanth Calls Soori After Watching ‘Mandadi’ Movie
தேவாவின் பக்திப் பாடல் சாம்ராஜ்யம்.. பலரும் அறிந்திடாத பக்கம்
Rajinikanth Calls Soori After Watching ‘Mandadi’ Movie
சாபத்தை போக்கிய நெல்சன்.. இமாலய வசூலை தொடுகிறதா ஜெயிலர் 2? ட்ரோலுக்கு ஆளான லோகேஷ் கனகராஜ்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com