\
deva - ajith
deva - ajithdeva - ajith

அஜித் வளர்ச்சிக்கு காரணமாக நின்ற தேவா பாடல்கள்! இரங்கல் செய்திகூட இல்லையே! ரசிகர்கள் வேதனை!

நடிகர் அஜித்திற்கு கிட்டத்தட்ட 12 படங்களுக்கு தேவா இசையமைத்திருக்கும் நிலையில், தேவாவின் மறைவுக்கு இரங்கல் செய்திகூட விடவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வருகின்றனர்.
Published on: 
Summary

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் காலமானார். அஜித் உள்ளிட்ட பல நடிகர்களின் வெற்றிக்கு தேவாவின் பாடல்கள் முக்கிய காரணமாக இருந்தன. ஆனால் தேவா மறைவுக்கு அஜித் இரங்கல் தெரிவிக்காதது ரசிகர்களின் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என கொண்டாடப்படும் இசையமைப்பாளர் தேவா, தன்னுடைய 76 வயதில் மாரடைப்பால் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசையை வழங்கியிருக்கும் தேவா, அண்ணாமலை, பாட்ஷா, ஆசை, நேருக்கு நேர் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசையமைப்பாளர் தேவா
இசையமைப்பாளர் தேவாஇசையமைப்பாளர் தேவா

ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற ஸ்டார் நடிகர்களுக்கு பல வெற்றிப் பாடல்களை வழங்கிய அவர், விஜய், அஜித் ஆகியோரின் ஆரம்பகால வெற்றிக்கு முக்கியத் தூணாக விளங்கியவர். அதிலும் அஜித்திற்கு வான்மதி தொடங்கி, ஆசை, காதல் கோட்டை, முகவரி, வாலி, சிட்டிசன், ரெட், ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட 12 படங்களுக்கு இசையமைத்திருந்தார். அதில் இடம்பெற்ற பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான் பா, கொஞ்ச நாள் பொறுதலைவா, மீனாட்சி மீனாட்சி, கண்ணை கசக்கும் சூரியனோ, ஒல்லிக்குச்சி உடம்பு காரி, ஏ நிலவே, குன்றத்துல கோவிலை கட்டி, நலம் நலம் அறிய ஆவல், மீனம்மா மேற்கே விதைத்த சூரியனை, மீனம்மா அதிகாலையிலும் என பல சூப்பர் ஹிட் படங்களையும், சூப்பர் ஹிட் ஆல்பம்களையும் தேவா கொடுத்திருந்தார்.

இந்தசூழலில் 3 படங்களுக்கு இசையமைத்திருந்த ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதோடு, இரங்கல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். முதல்வரும், நடிகருமான விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியிருந்தார். இப்படியான சூழலில் தான் ஒரு இரங்கல் செய்திகூட வெளியாடாத அஜித்தை ரசிகர்கள் விமர்சனம் செய்துவருகின்றனர். உங்களுடைய ரேஸிங் குழுவுக்கு ஆதரவு வேண்டுமென்று வீடியோ போட்டீர்கள், ஆனால் ஏன் தேவாவிற்கு இரங்கல் செய்திகூட போடவில்லை, நாம் முன்னேற ஏணியாக இருந்தவர்களை மறக்கக்கூடாது என்று வேதனை தெரிவித்து வருகின்றனர்.

சமூகவலைதளத்தில் எழுதியிருக்கும் ஒரு ரசிகர், ’தேவா மறைவு என்றவுடன் எனக்கு ஞாபகம் வந்தது அஜித்குமார் தான் பின்பு நடிகர் பிரசாந்த் ஏனென்றால் அந்த அளவுக்கு அஜித் குமார்கள் பாடல்கள் வெற்றி அடைய தேவா முக்கிய காரணமாக இருந்தார். இந்தப் பாடல்கள் எல்லாம் அஜித்தை ஒரு தகுதியான இடத்துக்கு கூட்டி சென்றன.

ஆனால் அதை எல்லாம் அஜித்குமார் மறந்துவிட்டு தன் உச்சத்தை அடைந்த பிறகு எனக்கு யாரும் வேண்டாம் நான் தனியாக போகிறேன் என்று இருக்கிறார்.

நம் வாழ்க்கையில் நாம் யாரை வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் தாய் தந்தையரையும் நம் வாழ்வில் உயர்வதற்கு ஏணியாக இருந்தவர்களையும் என்றும் மறக்கக்கூடாது ஆனால் அஜித் குமார் அதை செய்து வருகிறார்’ என பதிவிட்டுள்ளார்.

deva - ajith
தேவா மறைவு| “அந்த வலிதான் எனக்கும்..” கண்கலங்கி பேசிய வடிவேலு
deva - ajith
தேவா மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பு! - முதல்வர் விஜய் இரங்கல்
deva - ajith
"என் பாடல்களுக்கு காப்புரிமை கேட்பதில்லை..." தேவா சொன்ன காரணம்! | Deva | Leo | Vijay
deva - ajith
"எல்லாவற்றையும் முதல் ஆளாக செய்தான், இறப்பிலும்..." - தம்பியை நினைத்து உருகிய தேவா | Deva | Sabesh
deva - ajith
காலத்தாலும் அழியாத தேவாவின் 10 'MasterPiece' பாடல்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com