\

விஜயகாந்த் உடன் என் ஆசை மச்சான், செந்தூரபாண்டி, சொக்கத்தங்கம், வீரம் விளைஞ்ச மண்ணு, கள்ளழகர் போன்ற பல படங்களில் பணியாற்றியிருந்தாலும், பல மறக்கமுடியாத பாடல்களை கொடுத்திருந்தாலும் என் ஆசை மச்சானில் இடம்பெற்ற ராசிதான் கை ராசிதான் என்ற பாடல் ஒரு பாசிட்டிவ் வைப் கொடுக்கக்கூடிய பாடலாகும். ரம்மியமான இசையும், பசுமையான பின்னணியும் கொண்ட இந்தப்பாடல் மனதிற்கு ஒரு நிம்மதியை வழங்கிவிட்டு போகும். இதேபடத்தில் இடம்பெற்ற ’கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்’ பாடல் இன்றுவரை பல தாய்மார்களின் தாலாட்டு பாடலாய் இருக்கிறது.
இன்றுவரை நண்பர்கள் கேங் சேர்ந்து கோரஸாக பாடி வைப் செய்யக்கூடிய பாடலாக சலோமியா பாடல் இருந்துவருகிறது. ட்ரிப் என பிளான் செய்துவிட்டாலே பிளேலிஸ்ட்டில் சேர்க்கக்கூடிய முதல் பாடலாக சலோமியாவே இருக்கும். ’விரலோ நெத்திலி மீனு கண்ணோ காரகுடி, முகமோ கெலுத்தி மீனு மனமோ ஜனாாதுனி’ என சரணம் தொடங்குவதும் முடிப்பதும் ஒரு துள்ளலான உணர்வை கடத்தக்கூடியதாக இருக்கும். ஒட்டுமொத்தமாக இந்தப்பாடல் வைப் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டான பாடலாகும்.
ஆஹா திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல், ஒரு ஆணின் காதலை உருகி உருகி சொல்லும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். தேவா இசையிலும் ஹரிஹரனின் குளிரவைக்கும் குரலிலும் உருவான இந்தப்பாடல், எப்படி காட்சி அமைப்பையே மாற்றியமைத்தது என்று பிரம்மிப்புடன் சுரேஷ் கிருஷ்ணா ஒருமுறை கூறியிருந்தார். பல 90ஸ் காதலர்களின் நெஞ்சில் நீங்காத பாடலாக இன்றுவரை இருக்கிறது.
’நந்தவனம் இதோ இங்கேதான், நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன், நல்லவளே அன்பே உன்னால்தான் நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்’ என்ற பாடல் வரிகளும், ’நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்’ என ரிப்பீட் மோடில் வரும் வரிகளும் ஒரு ஆணின் காதலை அழகாக பிரதிபலிக்கும்.
முகவரி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏ நிலவே’ பாடல் வாழ்க்கையில் வெற்றிபெறவேண்டும் என போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் வலிகளை பாடக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கும். இந்தப்பாடல் ஆரம்பிக்கும் இசையே இளைஞனின் போராட்டத்தின் வலியையும், ஏமாற்றத்தையும் உணர்த்தக்கூடிய வகையில் இருக்கும். வைரமுத்து வரியும், உன்னி மேனனின் குரலும் பாடலுக்கு இன்னும் பலம்சேர்த்திருக்கும். ஆனால் இசையில் பல வித்தியாசங்களை கொடுத்திருக்கும் தேவா நமக்குள் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருப்பார்.
’நினைந்து நினைந்து நெஞ்சம் வலி கொண்டதே, என் நிழலில் இருந்தும் ரத்தம் கசிகின்றதே’
’இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது, இடி தாங்கும் இதயம் கூட மவுனம் தாங்காது’ போன்ற வரிகள் வலிகளை பேசக்கூடியதாக இருக்கும்.
வைப் செய்யக்கூடிய பாடல்களுக்கெல்லாம் தாய்ப் பாடல் ‘பஞ்சுமிட்டாய் சேலக்கட்டி’ என்று சொன்னால் பொய்யாகாது. இந்தப்பாடல் கொடுக்கும் துள்ளல் என்பதை இன்றுவரை எந்தப்பாடலும் கொடுத்ததில்லை. அதிலும் பாட்டு ஆரம்பிக்கும் அந்த பீட்டு, கேட்கும் ஒவ்வொருவரையும் ஆட்டம் போடவைக்கும் வகையில் இசையமைத்திருப்பார் தேவா.
கானா பாடல், கிராமிய பாடல் போன்றுதான் தேவாவால் போடமுடியும் என வைக்கப்பட்ட பிம்பங்களை எல்லாம் உடைத்த ஒரு தேவாவின் பாடல் என்றால் நேருக்கு நேர் படத்தில் இடம்பெற்ற ‘எங்கெங்கே எங்கெங்கே’ பாடல் தான். அதிலும் தேவாவின் பிரத்யேகமான இசையும் ஆஷா போஸ்லேவின் குரலும் அப்படி ஒரு காம்போவாக இசைவிருந்து படைத்திருக்கும். உடன் ஹரிஹரனும் சேர்ந்துவிட்டால் சொல்லவா வேண்டும். அப்படி ஒரு பாட்டு சார் இது.
இதேப்படத்தில் இடம்பெற்ற அவள் வருவாளா, மனம் விரும்புதே உன்னை பாடல்களும் இதற்கு சற்றும் சளைத்ததல்ல.
தேவா பல பக்தி பாடல்களை இசையமைத்திருந்தாலும் சின்னக்குயில் சித்ரா குரலில் உருவாக்கப்பட்டிருந்த இந்தப்பாடலுக்கென தனி பெண்ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதிலும் கோல விழியம்மா, ராஜகாளியம்மா என தொடங்கும் பல்லவிக்கும், பாடலின் இடையில் வரும் திருப்பத்தூர் பூக்காரி, திருவானைக்காரம்மா என வேகமாக வரும் ஒரு இசைப்பகுதிக்குமே தனியாக ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படியான வேகமான இசைத்தட்டுகளுக்கு இடையே ’பெண் இனங்கள் வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே, குங்குமத்தில் நீ இருந்து காக்கனும் என் மங்களமே’ என மெலோடி இசைப்பகுதியும் பாடலுக்கு இருவேறு ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது.
தேவா பல பாடல்களில் பாட்டு ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஒரு இசையை ஒலிக்கவிட்டிருப்பார். அப்படியான பல இசைகள் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது, ஆனால் மீனாம்மா பாடலில் வரும் முன்னணி இசை பேஸ் பீட்டுடன் புதுவிதமான இசைவிருந்தை படைத்திருக்கும். அந்த இசை முடிந்ததும் தொடங்கும் உன்னி கிருஷ்ணனின் குரல் நம்மை மயக்கும்விதமாக அமைந்திருக்கும். அதிலும் ’ஒரு சின்னப் பூத்திாியில், ஒளி சிந்தும் ராத்திாியில்’ என வரும் பகுதி இன்றளவும் இன்ஸ்டா ரீல்களை ஆக்கிரமித்துள்ளது. இந்தப்பாடலை கொண்டாடாத காதலர்களே இருக்கமுடியாது.
அதேபோல இந்தப்படத்தில் இடம்பெற்ற கொஞ்சநாள் பொறு தலைவா, புல்வெளி புல்வெளி பாடல்களும் காலத்தால் அழிக்க முடியாதவை.
பேருந்துகளிலும், ரேடியோக்களிலும் அதிகமாக ஒலிக்கவிடப்பட்ட பாடல்கள் என ஒரு பட்டியல் எடுத்தால் அதில் முதல் இடத்தில் இருக்கூடியது ’தூதுவளை இலை அரைச்சு’ பாடலாகத்தான் இருக்கும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழிக்கமுடியாத ஆன்மாவை இந்தப்பாடல் கொண்டுள்ளது. 80களில் காதலர்களின் உணர்வுகளை நெருக்கமாக காட்டிய இந்தப்பாடல் இன்றுவரை பலபேருடைய விருப்பப்பாடலாக இருக்கிறது.
முரளிக்காக தேவா பல திரைப்படங்களில் ‘ஒரு மணி அடித்தால், தஞ்சாவூர் மண்ணெடுத்து, என் மாமன் மதுர வீரன், விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி, கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு, பூசு மஞ்சள் பூசு மஞ்சள்’ என பல மறக்கமுடியாத பாடல்களை கொடுத்திருந்தாலும். காதலை உருகி உருகி போற்றவைத்த ‘உந்தன் முகம் பார்த்தபின்னே கண்ணிரண்டும் போவதென்றால் கண்ணிரண்டை நானிழப்பேன் இப்போதே’ வரிகளும், அதற்கு தேவா இசையமைத்திருந்த ஹம்மிங், புல்லாங்குழல் இசை அனைத்தும் சேர்ந்து காதல்விருந்தை படைத்திருக்கும்.
காலம் மாறி போச்சு திரைப்படத்தில் தேவாவின் இசையில் அமைந்திருந்த இந்தப்பாடல் பயங்கரமான வைப் மெட்டீரியல் பாடலாகும். வடிவேலுவால் இப்படி ஒரு பாடலை பாட முடியுமா என யோசிக்கம் அளவிற்கு இந்தப்பாடல் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த தனித்துவமான இசையும், வடிவேலுவின் குரலும், அந்த பீட்டும் வேறொரு இசை வடிவத்தை கொடுத்திருக்கும். இந்தப்பாடலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.