ஜெயிலரை தூக்கி சாப்பிட்டு முன்னேறிய லியோ..? 2023-ன் வசூல் மன்னன் ஜெயிலரா?? லியோவா??

ஜெயிலர் படத்தின் வசூலை லியோ மிஞ்சிவிட்டதா? உண்மையில் சாதனை நாயகன் யார் என்ற கேள்விகளுக்கான பதிலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.. முதல் நாள் வசூல் தொடங்கி, தமிழ் சினிமாவில் நடப்பு ஆண்டுக்கான வசூல் மன்னன் யார் என்பதையும் பார்க்கலாம்.
leo vs jailer
leo vs jailerfile image

தியேட்டர்களில் ரசிகர்களுக்கு விருந்தளித்து வந்த நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த நேரத்தில், முன்னதாக வெளியான ஜெயிலர் படத்தின் வசூலை லியோ மிஞ்சிவிட்டதா? உண்மையில் சாதனை நாயகன் யார் என்ற கேள்விகளை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர். இந்த ரேசில் யார்தான் வெற்றியாளர் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. Classic Pair ஆன த்ரிஷா மட்டுமல்ல, படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களையும், இயக்குநர்களை கொண்டு தியேட்டரில் விருந்துவைத்தார் லோகேஷ் கனகராஜ். எத்தனை கேரக்டர்கள் வந்தாலும், அத்தனையையும் தூக்கி சாப்பிட்டு படத்தை சுமந்தது என்னவோ விஜய்யின் பார்த்திபன் பாத்திரம்தான். அனைத்தையும் தாண்டி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்ததால், பெரிய அளவில் வசூலிக்காது என்று பேசப்பட்டது. ஆனால், அந்த பேச்சை முதல்நாளே முறியடித்தது லியோ. ஆம், உலகம் முழுவதும் முதல் நாள் வசூல் மட்டும் 148 கோடி ரூபாய். ஆனால் அதற்கு சற்று முன்னதாக வெளியான ஜெயிலர் படத்தின் வசூல் சுமார் 100 கோடி மட்டுமே.

leo vs jailer
ரஜினி முதல் அஜித் வரை.. மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சை தொடர்ந்து வைரலாகும் நடிகர்களின் பேச்சுகள்!

ஜெயிலர் vs லியோ: முதல் வார வசூல்..

நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியானது. அதன்படி, முதல்நாள் வசூல் ₹100 கோடியை தாண்டிய நிலையில், ஒரு வாரத்தில் ₹375 கோடியையும், 12 நாளில் சுமார் ₹510 கோடி மற்றும் 16 நாள் முடிவில் 525 கோடி ரூபாயை கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகார்ப்பூர்வமாக அறிவித்தது.

அந்த வகையில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான லியோ படம் முதல்நாளில் ₹148 கோடி, 7 நாள் முடிவில் ₹461 கோடி மற்றும் 12 நாள் முடிவில் ₹540 கோடியை வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ அறிவித்தது.

தமிழ்நாட்டு வசூலில் யார் முதலிடம்!

முன்னதாக வெளியான ஜெயிலர் படமும் சரி, அதன்பின் வெளியான லியோ படமும் சரி சர்வதேச அளவில் வசூல் வேட்டை செய்தன. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு படங்களும் சுமார் 200 கோடியை வசூல் செய்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டு வசூல் வேட்டையில் லியோவே வெற்றியை தட்டித் தூக்கியது.

தமிழ்நாட்டில் மட்டும் ஜெயிலர் படம் 189 கோடியை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், லியோவோ 231 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் முதல் இடத்தில் இருந்த பொன்னியின் செல்வனை கீழே தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது லியோ.

leo vs jailer
“தலைமறைவாகிற ஆள் நானில்லை” - மன்சூர் அலிகான்!

சர்வதேச வசூலில் யார் ஆதிக்கம் செலுத்தியது?

ஜெயிலர் படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ₹189 கோடியை வசூல் செய்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ₹84 கோடியும், கர்நாடகாவில் ₹63 கோடியும், கேரளாவில் ₹57 கோடியும் மற்ற மாநிலங்களில் ₹15.25 கோடியும் என இந்தியாவில் மொத்தமாக ₹409 கோடியை வசூல் செய்தது.

நடிகர் ரஜினி சர்வதேச அளவில் ரசிகர்களை கொண்டுள்ளதால், மற்ற உலக நாடுகளில் மொத்தமாக ₹198 கோடியை வசூல் செய்தது. ஆகமொத்தம் ஜெயிலரின் ஒட்டுமொத்த வசூல் ₹607 கோடி என்கிறது தரவுகள்.

லியோ வசூல் தெரியுமா?

நடிகர் விஜய்யின் லியோ படம் தமிழ்நாட்டில் மட்டும் ₹231 கோடியை வசூல் செய்தது. மட்டுமல்லாது, ஆந்திராவில் ₹48 கோடி, கர்நாடகாவில் ₹41கோடி, கேரளாவில் ₹60 கோடி மற்றும் மற்ற மாநிலங்களில் ₹41 கோடியை வசூல் செய்தது. அதன்படி, இந்திய அளவில் லியோ படம் ₹421.50 கோடியை வசூல் செய்துள்ளது. நடிகர் விஜய்யும் ரஜினிக்கு சளைக்காது சர்வதேச அளவில் ரசிகர்களை கொண்டுள்ளதால், மற்ற உலக நாடுகளில் ₹199 கோடியை வசூல் செய்துள்ளது. அதன்படி, லியோவின் ஒட்டுமொத்த வசூல் ₹620.50 கோடியாகும்.

தியேட்டரில் ஜெயிலர் 50 நாள்.. அப்போ லியோ!

தொடக்கம் முதலே நேர்மறையான விமர்சனங்களை பெற்ற ஜெயிலர் படம் சில தியேட்டர்களில் 50 நாட்கள் வரை ஓடியது. தியேட்டரில் வெளியான 30 நாட்களில் ஜெயிலர் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், லியோவோ வெளியான 36 நாட்களுக்கு பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு ஜிகர்தண்டா, ஜப்பான் போன்ற படங்கள் வெளியானாலும், தியேட்டர்களில் இன்றளவும் ஓடிக்கொண்டுள்ளது லியோ. பார்வையாளர்களின் வருகை குறைவு என்றாலும், ரோஹினி, மாயாஜால், ஏஜிஎஸ் உள்ளிட்ட சென்னையின் முன்னணி தியேட்டர்களில் இன்றளவும், நாளுக்கு ஒரு ஷோ என்ற அளவில் லியோ ஓடிக்கொண்டிருக்கிறது.

leo vs jailer
16 நாளில் ரூ.525 கோடி..12 நாளில் ரூ.540 கோடி..ஜெயிலரை முந்துவதில் லியோவுக்கு என்ன சிக்கல்? ஓர் அலசல்

2023ன் வெற்றியாளர் யார்?

நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகம், அதிகப்படியாக 350 கோடி ரூபாயை வசூல் செய்தது. அதையடுத்து வெளியான ஜெயிலர் ₹607 கோடியையும், லியோ படம் ₹620.50 கோடியையும் வசூல் செய்துள்ளது. அப்படிப்பார்த்தால், நடப்பு ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் லியோதான் வசூல் மன்னன்.

ஓடிடி என்று பார்த்தாலும், இதுவரை எந்த தமிழ் படமும் செய்யாத சாதனையை லியோ செய்துள்ளது. ஆம், எந்த தமிழ் படத்திற்கும் இல்லாத வரவேற்பாக, அதிகப்படியான தொகைக்கு லியோ விற்கப்பட்டுள்ளதாக படத்தின் லலித்குமாரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியானாலும், 16வது நாளில் ஜெயிலரின் வசூல் ₹525 கோடி மற்றும் 12 நாளில் லியோவின் வசூல் ₹540 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பாளர்கள் தரப்பு அறிவித்திருந்தன. அதற்கு அடுத்த காலங்களில் படத்தின் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், தினசரி வசூல்களை வைத்து ஜெயிலர் படம் 607 கோடி மற்றும் லியோ 620 கோடியை வசூல் செய்ததாக கூறுகிறது கோலிவுட் வட்டார புள்ளிவிவரம்.

எழுத்து: யுவபுருஷ்

leo vs jailer
ஜெயிலரிடம் தோற்றுவிட்டதா லியோ…? ரூ.540 கோடியோடு முடிந்த வசூல் விவரம்! இன்றே கடைசி நாள்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com