\
Suriya, Nayantara & Vijay Antony
Suriya, Nayantara & Vijay Antony AI

தீபாவளி 2026| சூர்யா vs நயன்தாரா vs விஜய் ஆண்டனி! பாக்ஸ் ஆபீஸில் ஜெயிக்கப்போவது யார்?

தீபாவளி திரையரங்க வெளியீடு போட்டியில் சூர்யா, நயன்தாரா, விஜய் ஆண்டனி, பிரபுதேவா படங்கள் நேருக்கு நேர் மோதவிருக்கின்றன.
Published on: 
Summary

இந்த தீபாவளி, சூர்யாவின் 'Scene', நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2', விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி', பிரபுதேவாவின் 'Moonwalk' ஆகிய நான்கு முக்கிய படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன. திரையரங்க போட்டி, ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி குறித்து பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தீபாவளி ரிலீஸ் என்பது மிக முக்கியமான சம்பவம். குறிப்பாக, தீபாவளிக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் நேருக்கு நேர் மோதும் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இந்த ஆண்டு தீபாவளிக்கு என்னென்ன படங்கள் வருகிறது, போட்டி நிலவரம் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

Suriya
SuriyaGVM

1. சூர்யாவின் ‘Scene’

சூர்யாவின் 47-வது திரைப்படம் ‘Scene’, இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் முக்கியமான படமாக உருவெடுத்துள்ளது. மலையாளத்தில் ‘ஆவேஷம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா இதில் இன்பராஜ் என்ற வித்தியாசமான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நஸ்ரியா நசீம், நஸ்லென், லுங்கி பாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். சூர்யாவின் புதிய தோற்றம், ஜித்து மாதவனின் இயக்கம் மற்றும் வித்தியாசமான கதைக்களம் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. படம் நவம்பர் 6, 2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Suriya, Nayantara & Vijay Antony
சூர்யா-க்கு SK பதிலடியா? வன்மத்தை இப்படி கக்குறாங்களே? நடந்தது என்ன?

2. நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ – பிரம்மாண்டமாகத் திரும்பும் அம்மன்

2020-ல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மூக்குத்தி அம்மன் 2’ உருவாகியுள்ளது. இந்த முறை சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா மீண்டும் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Mookuthi Amman 2
Mookuthi Amman 2X

‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி’ என்ற பெயரில் வெளியான டீசர், புராணப் பின்னணி, ஆபத்தில் இருக்கும் ஓர் அரச குடும்பம் மற்றும் நிகழ்காலத்தில் ஏற்படும் பேரிடர் போன்ற அம்சங்களைக் காட்டியுள்ளது. முதல் பாகத்தைவிடப் பிரம்மாண்டமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

நயன்தாராவின் நடிப்பு, ஆன்மிக அம்சங்கள், ஃபேண்டஸி காட்சிகள் எனப் பல அம்சங்களைக் கொண்ட இப்படம் நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது. சூர்யாவின் ‘Scene’ படத்துடன் நேரடியாக மோதுவதால், இந்தப் படத்தின் மீதும் பெரிய கவனம் இருக்கிறது.

Suriya, Nayantara & Vijay Antony
ரஜினி சார் முன்னாடி.. நான் அப்படி பயந்ததில்ல! கை எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு! - வித்யா பாலன்

3. விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ – குடும்ப உணர்வுகளுடன் களமிறங்கும் படம்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படமும் தீபாவளி வெளியீட்டுப் பட்டியலில் இணைந்துள்ளது. முதலில் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம், பின்னர் நவம்பர் 6-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. மு. மாறன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்ட குடும்ப உணர்வுகளும் ஆக்‌ஷன் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. லிதன்யா சிவபாலன், ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Vijay Antony
Vijay Antonyx

ஏற்கெனவே பல்வேறு கதைக்களங்களில் நடித்துள்ள விஜய் ஆண்டனி, இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சூர்யாவின் ‘Scene’ படத்துடன் ஒரே நாளில் வெளியாக இருப்பதால், இரு படங்களுக்கும் இடையிலான திரையரங்கப் போட்டி கவனிக்கத்தக்கதாக இருக்கும்.

Suriya, Nayantara & Vijay Antony
”இங்க பாரு SJ சூர்யா ரொம்ப பண்றீங்க..” ரஜினியே ஷாக்கான மொமண்ட்!

4. பிரபுதேவாவின் ‘Moonwalk’ – 25 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தத் தீபாவளிக்கு நடனம், நகைச்சுவை மற்றும் இசை விருந்தாக அமையவுள்ள திரைப்படம் ‘Moonwalk’. பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் என்.எஸ். இயக்கியுள்ளார். குறிப்பாக, சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது இப்படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளதுடன், அனைத்து பாடல்களையும் பாடியுள்ளார். மேலும், படத்தில் அவரும் ஒரு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். யோகி பாபு 16 வெவ்வேறு தோற்றங்களில் நடிப்பதும் படத்தின் தனித்துவமான அம்சமாகக் கூறப்படுகிறது.

Moonwalk
Moonwalk

பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு வெற்றி?

நான்கு படங்களும் நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் நிலையில், ஒரே நாளில் இத்தனை படங்கள் போட்டியிடுவது திரையரங்க ஒதுக்கீடு, திரையிடல்களின் எண்ணிக்கை மற்றும் தொடக்க வசூல் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இதே நேரத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, மிக பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் `ராமாயணா' படத்தை. ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இப்படம் நவம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. ஏ ஆர் ரஹ்மான் பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளரான ஹேன்ஸ் ஸிம்மருடன் இணைந்து இப்படத்தில் பணியாற்றியுள்ளார்.

இந்திப் படம் தான் என்றாலும், பல மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்தப் படம் வெளியாக இருப்பதால், தீபாவளி ரிலீஸில் மிகப்பெரிய படம் ராமாயணா தான். எனவே இந்தப் படங்களில் எல்லாமே சொன்னபடி வெளியாகுமா? என்பதும் கூட சற்று சந்தேகம் தான். இப்போதைக்கு, இந்தத் தீபாவளி கோலிவுட்டில் நட்சத்திரப் போட்டி, இசை, நகைச்சுவை, ஆன்மிகம், புராணம் எனப் பலவிதமான பொழுதுபோக்குகளுடன் களைகட்டத் தயாராக உள்ளது.

Suriya, Nayantara & Vijay Antony
90ஸ் நடிகை சிவரஞ்சனி மகள் மேதா ஹீரோயினாக அறிமுகம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com