Nayanthara acts with Salman Khan After Shah Rukh Khan in Bollywood
Nayantharax

அப்போ ஷாருக்கான், இப்போ சல்மான் கான்.. மீண்டும் பாலிவுட்டில் நயன்தாரா! | Nayanthara

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து 2023ல் வெளியான `ஜவான்' மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இன்று நயன்தாரா நடிக்கும் இரண்டாவது இந்தி படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Published on

மலையாளத்தில் சத்யன் அந்திக்காட் இயக்கிய மனசினக்கரே படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. இவர் தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்தவர், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து 2023ல் வெளியான `ஜவான்' மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

இந்த நிலையில் தான், இன்று நயன்தாரா நடிக்கும் இரண்டாவது இந்தி படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கில் பிரபாஸ் நடித்த `முன்னா', ஜூனியர் என் டி ஆர் நடித்த `பிருந்தாவனம்', ராம் சரண் நடித்த `யவடு' மகேஷ்பாபு நடித்த `மஹரிஷி' போன்ற படங்களை இயக்கியவர் வம்சி பைடிபள்ளி. தமிழில் கார்த்தி நடிப்பில் `தோழா',  விஜய் நடித்த `வாரிசு' படத்தையும் இயக்கினார். இப்போது இவர் அடுத்து இயக்கும் படம் இந்தியில் சல்மான் கான் நடிப்பில் உருவாகிறது.

Nayanthara acts with Salman Khan After Shah Rukh Khan in Bollywood
`டிராகன்'க்கு பின் தமிழில் நடிக்காததற்கு காரணம்.! - கயாடு லோஹர் | Kayadu Lohar

இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. இப்படத்தில் நாயகியாக நயன்தாரா இணைந்துள்ளார். தில் ராஜூ தயாரிப்பில் உருவாகும் படம் அடுத்தாண்டு ரம்ஜானுக்கு வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளும், மும்பையில் உள்ள  SRPF Groundல் பெரிய நகரம் ஒன்றை செட் ஆக உருவாக்கும் பணிகள் துவங்கி உள்ளதாம். ஏப்ரல் 14 முதல் இதன் படப்பிடிப்பு துவங்கும் எனச் சொல்லப்படுகிறது. தற்போது, சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் `Maatrubhumi: May War Rest in Peace' படம் வெளியீட்டுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Nayanthara acts with Salman Khan After Shah Rukh Khan in Bollywood
"இந்தப் பாட்டெல்லாம் டிரெண்டிங் ஆகாதுன்னு சொன்னாங்க..." - ஜி வி பிரகாஷ் சொன்ன சம்பவம் | Youth

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com