G V Prakash Kumar
G V Prakash KumarYouth

"இந்தப் பாட்டெல்லாம் டிரெண்டிங் ஆகாதுன்னு சொன்னாங்க..." - ஜி வி பிரகாஷ் சொன்ன சம்பவம் | Youth

முதலில் ஒரு ஆடியோ லேபிளுக்கு இந்தப் பாடலை காட்டும் போது அறிமுக ஹீரோ படம் என்பதால் ரொம்ப கம்மியான விலைக்கு வாங்குவதாக சொன்னார்கள். நான் இசையமைப்பாளர் என்றாலும், ஒரு சின்ன பையன் தான் ஹீரோ என்பதால் அந்த விலை.
Published on

கென் கருணாஸ் நாயகனாகவும், இயக்குநராகவும் அறிமுகமான படம் `யூத்'. இதில் சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, அனிஷிமா, மீனாக்ஷி எனப் பலரும் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி திரையரங்குகளில் பெரிய வரவேற்பை பெற்றது. ஜி வி பிரகாஷ்குமார் இசையில் இப்படத்தின் அத்தனை பாடல்களும் பெரிய ஹிட்டானது. சமீபத்தில் ஒரு பேட்டியில் இப்பட பாடல்களை குறித்து பேசி இருந்தார் ஜி வி பிரகாஷ்.

இது குறித்து பேசிய போது " `யூத்' படத்தின் அத்தனை பாடல்களும் இன்று ஹிட். இதனை என்னுடைய சொந்த ஆடியோ லேபிள் மூலம் வெளியிட்டுள்ளேன். முதலில் ஒரு ஆடியோ லேபிளுக்கு இந்தப் பாடலை காட்டும் போது அறிமுக ஹீரோ படம் என்பதால் ரொம்ப கம்மியான விலைக்கு வாங்குவதாக சொன்னார்கள். நான் இசையமைப்பாளர் என்றாலும், ஒரு சின்ன பையன் தான் ஹீரோ என்பதால் அந்த விலை. பெரிய நட்சத்திரங்கள் என்றால் இரண்டு மூன்று மடங்கு அதிக விலை கொடுப்பார்கள்.

G V Prakash Kumar
"என் படங்கள் ஓடாமல் போக காரணம்.." - ஓபனாக சொன்ன பரத் | Bharath | Kaalidas 2

அந்தப் படத்தையே ரொம்ப கம்மியாக பார்த்தார்கள். இந்தப் படத்தில் வைரலாக எந்தப் பாடலும் இருக்காது என நினைக்கிறோம் என்றார்கள். சரி இதை நான் என்னுடைய லேபிளில் வெளியிடுகிறேன் என சொல்லி முட்டக் கலக்கி பாடலை வெளியிட்டோம். அது மிகப்பெரிய ஹிட்டானது. அந்தப் படத்தையும், ஆல்பத்தையும் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்கள். அதன் பின்னர் எந்த லேபிள் இந்தப் பாடலை வேண்டாம் என சொன்னார்களோ, அதே லேபிள் திரும்ப வந்து அவர்கள் சொன்னதை விட ஐந்து மடங்கு அதிக விலை தருகிறோம் என சொன்னார்கள். ஆனால் நாங்கள் வேண்டாம் என சொல்லிவிட்டோம்." என்றார்.

G V Prakash Kumar
`யூத்' பார்த்துவிட்டு சிம்பு செய்த போன் கால்! - சுராஜ் வெஞ்சாரமூடு | STR | Suraj Venjanamodu | Youth

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com