Bigg boss7: நிக்சனை வெளியே அனுப்ப பிக்பாஸ் வீட்டினுள் போடப்படும் சதி திட்டம்.. தப்பிப்பாரா க்ரின்ச்?

”ஆலையமணியின் ஓசையை நான் கேட்டேன்” என்று தினேஷ் நிக்சனுக்கு எதிராக மணியடிக்க கண்டண்டை தேடிக்கொண்டிருக்கிறார்.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7விஜய் டீவி

பிக்பாஸ் 57ம் நாள் :

”ஆலையமணியின் ஓசையை நான் கேட்டேன்” என்று தினேஷ் நிக்சனுக்கு எதிராக மணியடிக்க கண்டண்டை தேடிக்கொண்டிருக்கிறார்.

“மணியடிக்க ரெடியா இருக்கீங்க போல...” என்று விசித்திரா தினேஷை கேட்டதும், கண்டெண்ட் தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் தேடினால் கிடைக்கும் என்கிறார்.

(கேப்டன் ஆகியே தீருவேன் என்று பல வாரமாக போராடி இந்த வாரம் தான் கேப்டன் பதவிக்கு வந்து இருக்கிறார் நிக்சன். அதை மணியடிச்சு காலிபண்ணிடாதீங்க தினேஷ்).

தினேஷ், நிக்சன்
தினேஷ், நிக்சன்விஜய் டீவி

அடுத்ததாக நாமினேசன் பிராசஸ்,

இதில் தினேஷ் ஏற்கனவே நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார். ஆக அவரை தவிர மற்றவர்களுக்கு செங்கல் கொடுக்கவேண்டும். ஆமாம் இது தான் பிக்பாஸின் ஐடியா... ரூம் போட்டு யோசிச்சு இருப்பாரு போல... பிக்பாஸ் கட்டிடம் கட்டி முடித்து பாக்கி செங்கல் மிச்சமாக இருந்திருக்கும் அதைஎன்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது அவருக்கு இப்படி ஒரு ஐடியா தோன்றியிருக்கும். இந்த செங்கலை சுமக்க ஒரு பையையும் ஏற்பாடு செய்திருந்தார்.

செங்கல் பை
செங்கல் பைவிஜய் டீவி

“நிக்சன் ஸ்டோர் ரூம்ல சில பொருட்கள் இருக்கு அத எடுத்து வந்து டேபிள் மேல வைங்க” என்று கனீர் குரலில் பிக்பாஸ் சொன்னதும், நிக்சன் ஓடி சென்று செங்கலையும் பையையும் கொண்டு வந்தார். இதன்படி அனைவரும் தனக்கு போட்டியாக கருதுபவர்களுக்கு செங்கலை தந்தனர். இதில் அதிக செங்கலை வாங்கி ஜோவிகா, அனன்யா, விசித்திரா, மணி, விக்ரம், கூல் சுரேஷ், தினேஷ், பூர்ணிமா இவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றனர்.

நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் தங்கள் பையில் இருக்கும் செங்கலை சுமந்தபடி இருக்கவேண்டும். எப்பொழுது பிக்பாஸ் பையை விடுங்கள் என்று சொல்கிறாரோ அப்பொழுது தான் இவர்கள் தங்கள் சுமையை கீழே இறக்க வேண்டும். என்றதும் அனைவரும் பேக்பேக் குடன் சுற்றிக்கொண்டிருந்தனர்.

மாயாவின் மெகா ஐடியா!

மாயா தனது ஐடியாவை பூர்ணிமாவிடம் சொல்லிகொண்டிருக்கிறார். “இனி நாம திட்டம் போட்டு விளையாடவேண்டும். திட்டப்படி நிக்சனை இந்த வாரம் நாமினேஷன் செய்து வெளியில அனுப்பிடனும், அதற்கான வேலையை நான் செய்யப்போகிறேன்” என்கிறார். (மாயா இன்னும் நீங்க திருந்தவே இல்லையா..)

நிக்சன்
நிக்சன்விஜய் டீவி

“பாவம்ங்க அவன். அவன் கொஞ்சநாள் இருக்கட்டும். கேப்டனா இருக்கனும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டான். இருந்துட்டு போகட்டுமே” என்று பூர்ணிமா சொல்கிறார். அடடே இவங்களுக்கு எப்பொழுது ப்ரைன் வேலை செய்ய ஆரம்பித்தது? இவங்க நல்லவங்களா மாறிட்டாங்களா அல்லது வேஷம் போடுகிறார்களா? என்ற எண்ணம் ஆடியன்ஸுக்கு தோன்றாமல் இல்லை.

மாயா நீங்க திட்டம் போட்டு நாமினேட் செய்யலாம். ஆனா யாரை வெளில அனுப்பனும்னு முடிவு செய்வது மக்கள். இதை ஒவ்வொரு வாரமும் கமல் சார் வந்து உங்களிடம் சொல்லிட்டே தான் இருக்காரு. ஆனா நீங்க அத காதுலதான் வாங்க மாட்டேங்கறீங்க...

நீதி மணியை அடிப்பதற்கு தினேஷ் வகுத்த திட்டம்

தினேஷ் ஏதாவது ஒரு பிரச்னை செய்து நீதி மணியை அடித்துவிடலாம் என நினைத்து, ”நெற்றியில் இருக்கும் பட்டத்தை யாரும் ஒழுங்காக ரூல்ஸ் படி போடவில்லை. அனைவருக்கும் அது தலையில் இருக்கு, இது ரூல்படி குற்றம்” என்று பிரச்னையை பூர்ணிமாவிடமிருந்து ஆரம்பித்து, அவர் தலையில் உள்ள தவளை பட்டத்தை உருவி விடுகிறார். இதில் பூர்ணிமாவுக்கும் தினேஷூக்கும் பிரச்னை ஏற்படுகிறது.

NGMPC22 - 147

இது என் தவளை அதை நான் மூக்கிலேயும் வச்சுப்பேன், நெத்தியிலும் வச்சுப்பேன், தலையிலேயும் வச்சுப்பேன். நான் ஏற்கனவே கேப்டனிடம் சொல்லிட்டேன் எனக்கு ஒத்த தலைவலின்னு அதனால அத நான் தலையில வச்சு இருக்கேன். அதை உருவும் அதிகாரம் உங்களுக்கு இல்லை” என்று சண்டையிடவும்,

“எனக்கும் தான் ஒத்த தலைவலி நான் நெத்தியில போடலையா? “ என்று தினேஷ் கேட்கவும்,

”நீங்க போடுங்க.. போடாம போங்க... எனக்கு என் ஹெல்த் ரொம்ப முக்கியம்.. அப்புறம் தான் கேம்” என்று சொல்லவும், இதற்கான தீர்வை எடுக்கும்படி தினேஷ் நிக்சனிடம் சொன்னார்.

பிக்பாஸ் 7
BIGG BOSS Day 57 | ‘இது அழுகை அல்ல... அதையும் தாண்டி’ - பூர்ணிமாவின் கண்ணீருக்கான டிக்‌ஷ்னரி!

“நான் சொல்றத சொல்லியாச்சு, கேட்கலைனா நா ஒன்னும் பண்ண முடியாது. அதற்காக நான் தலையில் மாட்டிவிட முடியாது. எல்லோரும் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு அமர்ந்து விடுகிறார் கேப்டன் நிக்சன்.

இதில் தினேஷ் எதிர்பார்த்தபடி அவர் விட்ட அம்பு நிக்சனை தாக்குவதற்கு பதில் U turn எடுத்து அவரையே தாக்கியது தான் வேடிக்கை. இத்த திட்டம் புஸ்ஸானதால, எல்லாரிடமும் சாரி சொல்லிட்டு அடுத்த திட்டம் என்ன என்பதை யோசிக்க சென்றுவிட்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com