BIGG BOSS DAY 10 | “உன்பேரே யாருக்கும் தெரியல; நீயெல்லாம் பேசக்கூடாது!” - நிக்ஸனிடம் சீறிய பிரதீப்!

“உங்களுக்கு சமைச்சு போடதான் சொல்லிருக்காங்க... ருசியா சமைச்சுபோடுன்னு சொல்லல... பிடிச்சா சாப்பிடுங்க, இல்ல போயிட்டே இருங்க” - மாயா
BIGG BOSS DAY 10
BIGG BOSS DAY 10PT

பிக்பாஸ் 10 ம் நாளான நேற்று, ‘இந்த வீட்டில் உள்ளவர்கள் யாரெல்லாம் மக்களை என்டர்டெயின்மெண்ட் பண்ணியிருக்கீங்க?’ என்ற கேள்விக்கு பதில் சொல்லும் டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் நிக்ஸன், “நான் எல்லோரையும் என்டர்டெயின் பண்ணியிருக்கிறேன். எப்படி சொல்றேன்னா, நான் உங்களை சிரிக்க வச்சுருக்கேன். நீங்க சிரிப்பதை பார்த்து வெளியில இருக்கும் மக்கள் சிரிச்சிருப்பாங்க. ‘இந்த பையன் இவ்வளவு நல்லா இருக்கானே... இவ்வளவு நல்லா பேசுறானே...’ன்னு எல்லோரும் என்னை பற்றி பேசியிருப்பாங்க... எல்லோருக்கும் என்னைப்பத்தி தெரிஞ்சிருக்கும்” என்றார்.

இதைக்கேட்ட பிரதீப் “உன் பேரே இங்குள்ளவர்களுக்கு சரியாக தெரியாது. எல்லோரும் உன்னை நெல்சன் நெல்சன்னுதான் கூப்பிடுறாங்க. உன் பேரு நிக்ஸன்னு யாருக்கும் தெரியல... அப்படி இருக்கும்போது நீ எப்படி என்டர்டைன்மென்ட் பண்ணி எல்லோரையும் கவர்ந்திருக்கன்னு சொல்லற? அதெப்படி முடியும்?” என்றார்.

உடனே நிக்ஸன், “கமல் சாரே என்னோட கவிதை வரிகளைப் பார்த்து அப்ரிஷியேட் பண்ணி இருக்காரு. என் பேர் தெரியலன்னா என்ன? நான் நிக்கறது என்னோட கவிதையில தெரியுது. அதுபோதும்” என்றார்.

அடுத்ததாக பிரதீப் எழுந்து பேச ஆரம்பித்தார். “நான் உள்ளே வந்ததும் இங்குள்ளவர்கள் இரண்டு பேரை டாஸ்க்கில் ஜெயிச்சிருக்கேன். நான் வெறும் துண்டை வெச்சு பொழுது போக்குகிறேன்னு ஒருத்தர் சொன்னார். ஒரு வாரம் முழுதும் கையில் துண்டை வைத்துக் கொண்டு இருந்தேன். இது கமல் சார் வரைக்கும் போனது. யாரு இவரு துண்டை வச்சுகிட்டு சுத்துறாருன்னு மக்கள் வரைக்கும் ரீச் ஆகி இருக்கும்” என்றார்.

இடையிலேயே ஐஷூ, “இது எப்படி என்டர்டைன்மென்ட் ஆகும்? நீங்க ஒருவரை சிரிக்க வைக்க அல்லது என்டர்டைன்மென்ட் பண்ண வைக்க என்ன செஞ்சீங்க?” என்றார் லாஜிக்கோடு! பிரதீப் சுதாரித்தபடி, “நான் பாட்டுப்பாடி இருக்கேன்; ரூல்ஸ் படி கேமும் விளையாடி இருக்கேன். ஆனா நீங்க ரூல்ஸ்படி கேம் ஆடவில்லை” என்கிறார்.

அதற்கு நிக்ஸன் எழுந்து, “நீங்க ரூல்ஸ் படி ஆடவில்லை. சிக்கன் ஃபிரை என்று எழுதி தந்தது ரூல்ஸே இல்ல...” என்றார் தடாலடியாக!

அதற்கு பிரதீப், “நீயெல்லாம் பேசக்கூடாது. உனக்கு தகுதியே இல்ல. உன் பேர் கூட இங்கிருப்பவங்களுக்கு ரிஜிஸ்டர் ஆகல. அப்படி இருக்கும்போது நீ எப்படி என்னை கேட்க முடியும்? பிரதீப்னா எல்லாருக்கும் தெரியும். நிக்ஸன்னா தெரியுமா? முதல்ல உன் பேரை எல்லார் மனசுலேயும் ரிஜிஸ்டர் பண்ணு. இது உன் நல்லதுக்குதான் சொல்றேன்” என்றுவிட்டார். தன்னை நோக்கிய இந்த கடுமையான வார்த்தைகளை, அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! நியாயம்தானே... நிக்ஸன் பிரதீப்புடன் சண்டை போட ஆரம்பித்தார். இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்ற, ஒருகட்டத்தில் நிக்ஸன் அழவே ஆரம்பித்துவிட்டார்.

இதில் நடந்த ஒரு நல்லது என்னவெனில், பிரதீப் சொன்னதுபோல நிக்ஸனின் பெயர் இனி எல்லோர் மனதிலும் இருக்கும். நேற்றே பிரதீப் கூல் சுரேஷிடம், “நிக்ஸனுடன் ஒரு கேம் ஆடனும். அவனை இங்க தங்கவைக்கனும்” என சொல்லியிருந்தது நினைவுகூரத்தக்கது. சொன்னதை நிறைவேற்ற ஆரம்பித்துவிட்டார் பிரதீப்! இனி நிக்ஸன் மேல் அனைவரது பரிதாப பார்வையும் திரும்பும்.

சரி கேமுக்கு வருவோம். விசித்திரா வந்தார். தன்னைப்பற்றி கூறும்பொழுது, “நான் ஒவ்வொரு நிமிடமும் எப்பொழுது ஸ்கிரீனில் வருவேன்னு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார்கள்” என்றதும் பூர்ணிமா நக்கலாக சிரித்தார். “எனது கான்வர்சேஷன் அத்தனையுமே இன்ட்ரஸ்டிங்காகத்தான் இருந்திருக்கும். நிச்சயம் போரிங்கா இருந்திருக்காது” என்றார் விசித்திரா. அது உண்மைதான், முதல் வாரம் பூரா உங்களையும் ஜோவிகாவையும் வைத்துதானே நிகழ்ச்சி சூடுபிடிக்க ஆரம்பித்தது...!

ஒருவழியாக ஒவ்வொருத்தராக வந்து தங்கள் பங்கு கதைகளை கூறினர். முடிவில், ‘நீங்களே யாராவது ஒருவரை தேர்ந்தெடுங்க’ என்று பிக்பாஸ் சொல்கிறார். எல்லோரும் ஒருமனதாக கூல் சுரேஷ் தேர்ந்தெடுக்கிறார்கள். ஜூல் சுரேஷ் கோல்ட் ஸ்டார் வாங்கினார்.

இதற்குள் அழுது முடித்து வந்த நிக்ஸன், பிரதீப்பிடம் “ஏன் என்னை எண்டர்டைனர் இல்லன்னு சொல்றீங்க? காரணம் சொல்லுங்க” என்றார். ‘அட தம்பி இன்னும் அதை விடலையா நீ’ என்றாகிவிட்டது பிரதீப்புக்கு.

இருப்பினும் பிரதீப் வேகமாக “நீ ஒரு கோழை... வரும்பொழுதே கேப்டன் பதவி எனக்கு வேணும் இல்லைனா, என்ன வெளில அனுப்பிடுவாங்கன்னு சொன்னல்ல...” என்றார்.

“நா அதுக்காக பயப்படல... உங்களை எல்லோருக்கும் தெரியும், என்னை தெரிஞ்சுக்க, என் திறமை மக்கள் புரிஞ்சுக்க சில நாள் தேவைப்பட்டுச்சு அதுக்கு தான் கேட்டேன்” என்றார் நிக்ஸன்.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் மீண்டும் முற்றிற்று...

BIGG BOSS DAY 10
BIGG BOSS DAY 4 Review | ”உன் Peace of Mind-ஐ நீயே பீஸ் பீஸா ஆக்கிடுவ!”

ஐஷு நிக்ஸனுக்கு சப்போர்ட்டாக பிரதீப்பிடம் பேச வர, “நீ என்ன எங்க ரெண்டுபேரையும் வச்சு கண்டண்ட் ரெடி பண்றீயா?” என அவர் கேட்க, “நா எதுக்கு கண்டண்ட் பண்ணனும்? அவரு பாவம்ன்னு கேட்கவந்தா...” என்றார். நிதானித்தபடி பிரதீப் அவரையும் கட் செய்து அனுப்பினார்.

இன்னொருபக்கம், விசித்திரா தனது ஆதங்கத்தை பிக்பாஸிடம் அடிக்கடி கேமரா முன்பாக வந்து சொல்லிவிட்டு செல்கிறார். ஆனால் பிக்பாஸ் எந்த ரியாக்ஷனும் தரல...!

இதனிடையே ரவீனாவின் பிறந்த நாளை அனைவரும் கேக் வெட்டி செலிபரேட் செய்தனர்.

பிரதீப் - நிக்ஸனின் பிரச்சனையை பார்த்த மாயாவிற்கு ஒரு ஐடியா தோன்றியிருக்க வேண்டும். தானும் எல்லாரிடமும் சண்டையிட்டு மக்கள் தனது பெயரையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்து ஒவ்வொருத்தரிடமும் பிரச்னையை ஆரம்பித்தார்.

இதனிடையே ஸ்மால் பாஸ் வீட்டிலிருப்பவர்கள் சேமியா உப்புமா செய்யத்தெரியாமல் அதைப்போட்டு சாம்பார் சாதம் போல் செய்யவும், இதை பார்த்து காண்டான விசித்திரா... “உங்களுக்கு சேமியா உப்புமா செய்ய தெரியாதுன்னா என்கிட்ட கேட்டு இருக்கலாம்ல.... இதெல்லாம் உப்புமாவா... சொன்னா யாராவது நம்புவாங்களா?” என்றார் கோபமாக.

“டேஸ்டா சமைக்க நாங்க ஒன்னும் இங்க ரெஸ்டாரண்ட் வச்சு நடத்தல... உங்களுக்கு சமைச்சு போடதான் சொல்லிருக்காங்க... ருசியா சமைச்சுபோடுன்னு சொல்லல... பிடிச்சா சாப்பிடுங்க, இல்ல போயிட்டே இருங்க” என்று பொறுப்பே இல்லாமல் கவுண்ட்டர் தந்தார் மாயா.

‘இதெல்லாம் பார்த்து பயப்படுறவ இல்ல இந்த சுசித்ரா...’ என்பது போல போய்விட்டார் நம்ம சுசிம்மா...! ரைட்டு, அடுத்த பிரச்னைக்கு அடித்தளம் போட்டிருக்கார் மாயா என்பதுபோல ஆகிவிட்டது.

அடுத்ததாக ஒரு டாஸ்க் நடந்தது. “இதில் தோற்றால் டாய்லெட் திங்ஸ், எலட்ரானிக் திங்ஸ் எல்லாவற்றையும் எடுத்துட்டு போய்டுவோம்”னு பிக்பாஸ் சொல்ல... இதில் சுசித்ராவை தவிர பிக்பாஸ் வீட்டிலிருந்த மற்ற ஐந்து பேர் கலந்துகொண்டார்கள். அட்டை டப்பாக்களை இரண்டு கைகளால் தாங்கும் டாஸ்க் இது. ஆனால் ‘ராத்திரி முழுக்க உட்கார்ந்து இததான் ஒட்டுனீயா’ என்பது போல் அட்டை டப்பாக்கள் அத்தனையும் பிஞ்சு கீழ விழ... ”வேற டப்பாக்கள் சிறிது நேரம் கழித்து வரும்” என்ற பிக்பாஸ், கிழிஞ்ச அட்டை டப்பாவை ஒட்ட போய்ட்டாரு..

இந்த கேப்பில் விசித்திரா, “நானும் இதுல கலந்துக்கவா... என்னை மட்டும் ஏன் எதுலேயும் சேர்த்துக்க மாட்டீங்கறீங்க” என்று ஜோவிகாவை பார்த்து கேட்கவும்,

“விச்சு, இதுக்கு ஆம்ஸ் பலமா இருக்கனும், நீங்க கேப்டன்கிட்ட கேளுங்க” என்று கூறிவிட்டார். விசித்திராவும் கேப்டன் சரவண விக்ரமிடம் கேட்க, விக்ரம் ‘இருங்க நான் பிக்பாஸிடம் கேட்டு சொல்றேன்’னு சொல்லி கேமராவை நோக்கி “பிக்பாஸ், சுசித்ராவ இதுல சேர்த்துகவான்னு நா உங்ககிட்ட கேட்டேன், நீங்க வேண்டாம்னு சொன்னதா அவங்ககிட்ட சொல்லிடறேன். ஆனா இத அவங்ககிட்ட சொல்லிடாதீங்க” என்றார் தயங்கியபடியே. வயதை கருத்தில்கொண்டு, விசித்திராவில் இதில் பங்குகொள்ள முடியாது என்று விக்ரம் நினைத்திருப்பார்போல...! நமக்கு குறும்படம் ஞாபகம் வருது.

BIGG BOSS DAY 10
பிக்பாஸ்7: ”பிரதீப் கூட நான் தங்கமாட்டேன்..எனக்கு பயமா இருக்கு”-மாயாவுக்கு பிக்பாஸ் கொடுத்த அட்வைஸ்!

தொடர்ந்து பிக்பாஸ் ஒட்டின அட்டை டப்பா வரவும் மீண்டும் டாஸ்க் ஆரம்பிக்கிறது. டாஸ்கில் வெற்றியும் பெற்றார்கள். எப்படியோ எலக்ட்ரானிக் திங்க்ஸ், டாய்லெட் திங்க்ஸ் எல்லாம் தப்பித்துவிட்டது!

நாளை என்ன நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்...!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com