BIGG BOSS Day 8 | “பிரதீப் கூட நான் தங்கமாட்டேன்.. பயமா இருக்கு”- மாயா; பிக்பாஸ் கொடுத்த அட்வைஸ்!

பிரதீப்பும் இந்த வார விளையாட்டை மாயாவிடமிருந்து ஆரம்பித்து இருக்கிறார். தனது அம்மாவைப்பற்றி மாயா தவறாக பேசியதாக குற்றம் சாட்டுகிறார் பிரதீப்.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7PT

பிக்பாஸ் 8ம் நாள்..

போட்டியில் வென்று இரண்டாவது வாரத்திற்கான கேப்டன்  பதவியை வென்றார் விக்ரம். கேப்டன் ஆனதும் முதல் பொறுப்பாக ஏழுபேரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்ப நபர்களைத் தேர்ந்தெடுத்தார். அந்த ஏழு பேரும் ஸ்மால் பாஸ்  வீட்டிற்குச் சென்று என்னவெல்லாம் செய்கிறார்கள், பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுதான் வரும் நாட்களிள் நடக்கப்போகும் நிகழ்வு .

மீண்டும் பவா ஸ்மால்பாஸ் வீட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை நினைத்து கொஞ்சம் கவலைப்பட்டார். அதனால் என்னவோ அவர் பிடிக்காமல் மறுநாளே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்.

பிக்பாஸ் 7
பிக்பாஸ்7: ”நெஞ்சு வலிக்கிது; ஒரு நாள்கூட என்னால் இனிமேல் இங்கிருக்க முடியாது” - வெளியேறினார் பவா!

மாயாவிடமிருந்து விளையாட்டை ஆரம்பித்த பிரதீப்

பிக்பாஸை பொருத்தவரை அங்கிருக்கும் போட்டியாளர்கள் ஏதாவது பிரச்சனை செய்து அடுத்தவர்களை வெளியேற்றி தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருத்தரும் தனக்கான வாய்ப்பை தேடிக் கொண்டே இருக்கிறார்கள். இதில் மாயாவும் விஷ்ணுவும் தனது கேமை விளையாட ஆரம்பித்து இருக்கின்றனர். பிரதீப்பும் இந்த வார விளையாட்டை மாயாவிடமிருந்து ஆரம்பித்து இருக்கிறார். தனது அம்மாவைப்பற்றி மாயா தவறாக பேசியதாக குற்றம் சாட்டுகிறார் பிரதீப்.

”இந்த பேச்சை இப்ப விடுங்க”

மாயாவோ ”உனது அம்மா யார் என்று எனக்கு தெரியாது. உன்னுடைய வரலாறு எதுவும் எனக்கு தெரியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி நான் உன்னை தவறாக பேச முடியும் ?” என்று கேட்கிறார்

இதுகுறித்து விஜய், மாயா, விக்ரம், பிரதீப் இவர்கள் நான்கு பேருக்குள்ளேயும் வாக்குவாதம் நிகழ்கிறது. அதற்கு பிரதீப் ”சரி இந்த பேச்சை இப்ப விடுங்க, குறும்படம் போடுவாங்கல்ல அப்ப பாத்துக்கலாம்” அப்படின்னு சொல்றாரு..

”இவன் கூட நான் தங்கமாட்டேன்.. எனக்கு பயமா இருக்கு” - மாயா

மாயா இது குறித்து மணிச்சந்திரனிடம், ”பிரதீப்புடன் நான் எப்படி ஸ்மால் வீட்ல இருக்க முடியும்? என்னால முடியாது இவன் என்னை ஏதாவது பண்ணிவிடுவான். எனக்கு பயமா இருக்கு. சைக்காலஜிஸ்ட் ஹெல்ப் இவனுக்கு தேவை, இவன் கூட நான் தங்கமாட்டேன்” என்ற மாயா கன்செக்ஷன் ரூம் சென்று பிக் பாஸிடம் பிரதீப் பற்றி பேசும் பொழுது, மாயாவிடம் பிக் பாஸ் ”நீங்கள் இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்; உங்களை 24 மணி நேரமும் எங்கள் டீம் ஃபாலோ பண்ணிக் கொண்டு இருக்கிறது உங்களுக்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதை பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். ஆகவே கவலைப்பட தேவையில்லை. உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்” என்று உறுதிமொழி கொடுத்ததும் மாயா அமைதி ஆகிறார்.

ஆனால் மாயாவிற்கு ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல விருப்பமில்லை என்று நன்றாக தெரிகிறது. ஏனெனில், பிரதீப்பை பயன்படுத்தி பிக்பாஸ் வீட்டிலேயே இருக்கலாமென்று ப்ளான் செய்தால் அது முடியவில்லை. ஆகையால், அன்றிரவை அப்படி இப்படியுமாக கழித்துக் கொண்டிருந்தார். இதை கண்ட விசித்திரா, ”அவளுக்கு அங்க போய் வேலை செய்யணும்னு இருக்கு. அதனால்தான் அவ அங்க போக மாட்டேங்குறா” என்று யுகேந்திரனிடம் சொல்கிறார்.

”நான் ஒன்றும் சோம்பேறி கிடையாது” - விஷ்ணு

அடுத்ததாக விஷ்ணு அவர் பங்கிற்கு பிரச்சனையை விக்ரமிடத்திலிருந்து ஆரம்பிக்கிறார். “என்னை சோம்பேறி என்று கூறிதான் ஏழு பேரில் ஒருவராக தேர்வு செஞ்சீங்க; அதுக்கு காரணம் என்ன? நான் ஒன்றும் சோம்பேறி கிடையாது, நான் மதியம் தூங்கி என்றாவது நாய் குலைத்து இருக்கிறதா?” என்று காச்பூச் என்று கத்துகிறார்.

விஷ்ணுவிற்கும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல மனமில்லை என்பது நன்றாக தெரிந்தது. அதற்கு காரணம் விக்ரம் தான் என்று நினைத்தவர் அவரிடமிருந்து பிரச்சனையை ஆரம்பிக்கிறார்.

”விஷ்ணு கூறுவதை யாருமே கண்டுக்காதீங்க..” - ஜோவிகா

இப்படி சிலருக்கு ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் சென்றதால் நேரத்திற்கு பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்களுக்கு காபி டீ கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதில் இரு வீட்டாருக்கும் பிரச்சனை ஏற்பட விஷ்ணு சகட்டுமேனிக்கு அனைவரிடமும் சண்டையிருகிறார். இதைக் கண்ட ஜோவிகா, “குழந்தை அழுது அடம் பிடித்தால் நாம் அதற்கு அட்டென்ஷன் தரக்கூடாது. அப்படி தந்தால் அது மேற்கொண்டு அழும். அதுபோல விஷ்ணு கூறுவதை யாருமே கண்டுக்காதீங்க..” என்கிறார். அம்மா தாயீ... யாரும்மா நீ.... உன் அம்மாவயே தூக்கி முழுங்கிடுவே போலிருகே..(ஆடியன்ஸ் மைண்ட் வாய்ஸ்)

”எல்லாருமே கொஞ்சம் அமைதியா போங்க” - யுகேந்திரன்

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் யுகேந்திரன் சிலரிடம் எச்சரிக்கிறார். ”அனாவசியமாக யாரும் பிரச்னை பண்ணாதீங்க; ஏன்னா நாமினேஷன் பிராசஸ் வரப்போகுது அப்போ ஸ்மால் பாஸ் வீட்ல உள்ளவங்க நம்மை நாமினேட் பண்ணுவாங்க. அதனால எல்லாருமே கொஞ்சம் அமைதியா போங்க” என்கிறார். இதை அவர் ஃபாலோ பண்ணியதால் இந்த வார நாமினேஷனில் அவர் பெயர் வரவில்லை.

அடுத்ததாக வரும் வாரத்திற்கான மளிகை சாமான்களை பர்சேஸ் பண்ணும் டாஸ்க் வருகிறது. 51 ஆயிரத்திற்கு மளிகை சாமான்கள் வாங்கப்படுகிறது. இதற்கான டாஸ்க்கு இந்த வாரம் தொடரப்படும். இவர்கள் செய்த பர்சேஸில் சர்க்கரையை மறந்து விடுகிறார்கள்.

”பாரதி கண்ணம்மா பொண்ணுக்கு ஒண்ணுமே பர்சேஸ் பண்ண தெரில” - விசித்திரா

விசித்திரா குடும்ப பெண் என்பதை தெளிவுபடுத்தும் விதத்தில், தனக்கு தானே புலம்பி கொள்கிறார் ”தக்காளி போன வாரம் வாங்கியதே அப்படியே இருக்கு... இதுல இந்த வாரத்துக்கு இவ்வளவு தக்காளியை வாங்கி குவிச்சாச்சு...இந்த பாரதி கண்ணம்மா பொண்ணுக்கு ஒண்ணுமே பர்சேஸ் பண்ண தெரில. எதெதுவோ வாங்கி குமிச்சி வச்சிருக்கு ” என்று தனக்கு தானே பேசிக் குழம்பிக் கொள்கிறாள்

அடுத்ததாக நாமிநேஷன் ப்ராசஸ் நடக்கிறது. இதில் மாயா, விஷ்ணு, பிரதீப், அக்ஷயா, விசித்திரா, ஜோதிகா, பூர்ணிமாவின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் யார் பிக்பாஸை விட்டு வெளியேறுவார்கள் என்று தெரிந்துக்கொள்ள ஞாயிறு வரை காத்திருக்க வேண்டும்.

இதில் அக்ஷயா மற்றும் வினுஷா இருவரும் போன வாரம் சரியாக பர்பாமன்ஸ் பண்ணாததால் இருவரையும் பிக் பாஸ் சிறைக்கு செல்ல இருக்கின்றனர்.

(விளையாட்டு தொடரும்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com