BIGG BOSS DAY 4 Review | ”உன் Peace of Mind-ஐ நீயே பீஸ் பீஸா ஆக்கிடுவ!”

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடைய ஒரிஜினல் கலர் தெரிய வருகிறது. அப்படி நேற்று, விசித்திராவின் மற்றொரு முகம் தெரியவந்தது.
Bigg Boss Day 4
Bigg Boss Day 4Bigg Boss

பாப்புலர் டாஸ்க்!

நேற்று நடந்த பாப்புலர் டாஸ்க்கில், “யார் பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளேயும், பிக்பாஸ் வீட்டிற்கு வெளியேயும் மிகவும் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்கள் போட்டியில் வெற்றி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். அவ்வாறு வெற்றி பெற்ற மூன்று பேரில் மற்றவர்கள் யார் அவர்களை கவர்ந்தவர்கள் என்று வோட் செய்கிறார்களோ அவர்கள் வெற்றியடைந்தவர்களாக கருதப்படுவார்கள்" என்று பிக்பாஸ் சொன்னதும் போட்டி ஆரம்பித்தது. இறுதியில் மணிச்சந்திரா இந்த டாஸ்கில் வெற்றி பெற்று "கோல்ட் ஸ்டாரை" பரிசாக பெற்றார்.

பூர்ணிமா
பூர்ணிமாBigg Boss

பூர்ணிமாவுக்கும் கூல் சுரேஷுக்குமான போட்டியில் பூர்ணிமா தோற்று விடவே, பூர்ணிமா விஷ்ணுவிடம், “எனக்கும் கூல் சுரேஷ் அண்ணாவுக்கும் கேம்ல அண்டர்ஸ்டாண்டிங் இல்ல. எனக்கு பேச கொஞ்சம் டைம் கொடுங்கன்னு கேட்டதுக்கு, அவர்தான் எங்கிட்ட சண்டை போடுறாரு” என்று கூறி முறையிட்டார். தொடர்ந்து இவ்விவகாரத்தில் வாக்குவாதம் நடந்தது.

இதற்கு நடுவில் நிக்ஸன், கூல் சுரேஷிடம் வந்து "எல்லாரும் உங்கள கார்னர் பண்ணிட்டாங்க. உங்களை தூக்கப் போறாங்கன்னு சொல்லிக்கிறாங்க... ஜாக்கிரதை..." என்று எச்சரித்து பயமுறுத்தும் விதமாக பேசி சென்றார்.

பீஸ் ஆப் மைண்ட்

பிரதீப்பும் ஐஸூவும் சமையல் அறையில் பேசிக்கொள்கையில் பிரதீப், “நான் வீட்டில் இருக்கும்போது 12 மணி நேரத்துக்கு நன்றாக தூங்குவேன். ஆனால் இங்கு அப்படி தூங்க எனக்கு பீஸ் ஆப் மைண்ட் தேவை. ஆனால் இங்கு அது முடியாது. அதனாலதான் நான் தனியா இருக்க ஆசைப்படறேன்” என்றார்.

பிரதீப்
பிரதீப்Bigg Boss

இதற்கு உடனே யுகேந்திரன், “உங்க பீஸ் ஆஃப் மைண்டை நீங்களே பீஸ் பீஸா ஆக்கிடுவீங்க” என்று கவுண்டர் கொடுத்து சென்றது வேற லெவல்.!

ஒரிஜினல் கலர்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடைய ஒரிஜினல் கலர் தெரிய வருகிறது. அப்படித்தான் நேற்று விசித்திராவின் மற்றொரு முகம் தெரிய வந்தது.

விசித்திரா
விசித்திராBigg Boss

விசித்திரா வினுஷாவிடம் "இங்க பாரு ஒரு கப்புல பூரியும் உருளைக்கிழங்கையும் எடுத்து தனியா வச்சுடு. இல்லன்னா எல்லாத்தையும் அவங்களே சாப்பிடுவாங்க, நமக்கு ஒன்னும் இல்லாம போயிடும்" என்று சொல்லும் போதும் சரி; நிக்ஸனை தான் சொல்வதற்கு கட்டுப்பட்டே ஆகணும் என்ற விதத்தில் பேசியபோதும் சரி... அவரது உண்மையான முகம் வெளியில் தெரிந்தது. நிக்ஸனுக்கும் விசித்திராவுக்கும் வந்தது ஒரு சாதாரண விஷயம்தான். ஆனால் அதற்கு விசித்திரா ரியாக்ட் பண்ணிய விதம்தான் சிக்கல்.

அப்படியென்ன சம்பவம் அது?

நிக்ஸன் முட்டை குழம்பு வைத்தார். விசித்திரா நிக்ஸனிடம், “இதை இப்படி பண்ணாத, முட்டையை உடைத்து ஊத்தக் கூடாது. அதை முழுசா குழம்புல போடு” என்று சொல்ல, நிக்ஸனோ “அது எல்லோருக்கும் பிடிக்காது” என்றார். "நான் சொல்வதுபோலதான் சமைக்கணும்" என்று விசித்திரா சொல்லிவிட்டார்.

நிக்ஸனும், “ஆனா நீங்க சொல்றத சமைச்சா, அதுவும் சில பேருக்கு பிடிக்கல... அவங்க பிடிக்காமதான் சாப்பிடுறாங்க...” என்று சொல்லவே, விசித்திராவிற்கு கோபம் வந்து “இப்போ அவனோட ஒரிஜினல் கலர் வெளிய வருது பாருங்க” என்று நிக்ஸனுடன் சண்டையிட தொடங்கிவிட்டார்.

நிக்ஸனோ, “நீங்க செய்யற சாப்பாட்டை நான் குறை சொல்லல. இந்த டைப்ல வைக்கிற குழம்பதான் நான் சொன்னேன்” என்று பதில் சொன்னார். இருந்தாலும், “இல்ல நீ என் குழம்பைத்தான் சொன்ன... நீ இப்படி என்னிடம் பேச கூடாது" என்று அதட்டும் விதத்தில் பேசினார் விசித்திரா. விசித்திராவின் அகங்காரம், அப்பட்டமாக தெரிந்தது!

பிக்பாஸ் Day 4
பிக்பாஸ் Day 4Bigg Boss

விசித்திராவின் கோபத்தை பார்த்த நிக்ஸன் கொஞ்சம் பயந்துதான் போனார். ஆனால் யுகேந்திரன் நிக்ஸனுக்கு சப்போர்ட் செய்து பேசியதை எதிர்பார்க்காத விசித்திரா சற்று தன் குரலை குறைத்துக் கொண்டார். அத்துடன் அச்சமயத்தில் அங்கு இருப்பவர்கள் நிக்ஸனுக்கு சப்போர்ட் செய்ய, விசித்திராவின் மூக்கு உடைபட்டது தான் மிச்சம்.

அதேபோல் கூல் சுரேஷ் திடீர் திடீரென்று ”தமிழன்டா தமிழன்டா” என்று அடித்தொண்டையில் கத்தும் போது நமக்கு விழுந்து அடித்துக் கொண்டு ஓடும் மனநிலைதான் வருகிறது. இப்படி கத்துற கத்தல்ல அவருக்கு தொண்டை வலி வந்தாலும் சந்தேகம் இல்லை.

விஷ்ணு - கூல் சுரேஷ் - மணிச்சந்திரா
விஷ்ணு - கூல் சுரேஷ் - மணிச்சந்திராBigg Boss

No Makeup Task!

அடுத்ததாக ஷாப்பிங் பட்ஜெட் டாஸ்க். இதில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் பெண்களுக்கான மேக்கப் பொருட்களை எடுத்துக்கொண்டு சென்று விடுவோமென சொல்லிவிட்டர் பிக்பாஸ். அதுவே டாஸ்க்கில் வெற்றி பெற்றால் வாங்கிய கடனுக்கு 11,000 ரூபாய் குறையும்!.

எப்படியோ அழகாக ப்ளான் செய்து வெற்றி பெற்று விட்டார்கள். அதனால் அவர்கள் வாங்கிய 54,963ல் தொகை குறைக்கப்பட்டது.

இதுவும் கடந்து போகும் Task!

அதேபோல் அடுத்த டாஸ்கான ”இதுவும் கடந்து போகும்” டாஸ்க்கில் தோற்றால், போட்டிருக்கும் உடையை தவிர மற்றதை எடுத்துக்கொண்டு செல்வதாக பிக்பாஸ் கூறிவிட்டார். டாஸ்க்கில் வெற்றி பெற்றால் இன்னொருமுறை 11,000 ரூபாய் அவர்கள் வாங்கிய கடனிலிருந்து குறையும் என்றார். ஆனால் இந்த டாஸ்க்கில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

விஷ்னு - கூல் சுரேஷ் - பிரதீப்
விஷ்னு - கூல் சுரேஷ் - பிரதீப்Bigg Boss

ஆகவே அவர்கள் தங்களது மற்ற டிரஸ்களை பேக் செய்யுமாறு பிக்பாஸ் கூறியிருக்கிறார். இப்படி வம்பு விளையாட்டு என்று சென்றாலும் நேற்று எபிஸோடில் சுவாரஸ்யம் கொஞ்சம் கம்மியாகதான் இருந்தது.

நாளை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com