பிக்பாஸ் 7: மாறி மாறி மன்னிப்பு கேட்ட போட்டியாளர்கள்; "இவனை நம்பாதே..." பூர்ணிமாவிடம் சொன்ன மாயா!

அர்ச்சனாவும் விஷ்ணுவும் எல்லோரிடமும் மாறி மாறி, சாரி சொல்லியபடி இருந்தனர். இதில் அர்ச்சனா ஒரு படி மேலே போய் விஷ்ணுவையும், பூர்ணிமாவையும் சேர்த்துவைக்க முயற்சி எல்லாம் செய்து வந்தார்.
பிக்பாஸ்  7
பிக்பாஸ் 7விஜய் டீவி

72 வது நாள்!

பிக்பாஸில் சென்ற வாரம் கமல் போட்டியாளர்கள் அனைவரையும் நிற்க வைத்து இந்த வீட்டில் fun இல்லை... ஒருத்தரை ஒருத்தர் முன்னேற விடாமல், நீங்கள் முன்னேறாம இருக்கிறீங்க. இது என் வீடு இந்த வீட்டில், ஆபாச வார்த்தைகளுக்கோ சண்டை சச்சரவுகளுக்கோ இடமில்லை. என்று strike card எடுத்துக்காட்டி, நிக்சன், விஷ்ணு, தினேஷ், அர்ச்சனாவை எச்சரித்தார்.

பிக்பாஸ்  7
பிக்பாஸ் 7: செய்த தவறை நினைத்து வருத்தப்படும் விஷ்ணு

இதனால் அர்ச்சனாவும் விஷ்ணுவும் எல்லோரிடமும் மாறி மாறி, சாரி சொல்லியபடி இருந்தனர். இதில் அர்ச்சனா ஒரு படி மேலே போய் விஷ்ணுவையும், பூர்ணிமாவையும் சேர்த்துவைக்க முயற்சி எல்லாம் செய்து வந்தார். இதை கண்ட மாயா, பூர்ணிமாவிடம் “நீங்க திரும்ப திரும்ப இதே தப்ப பண்றீங்க... திருப்பி விஷ்ணுட்ட பேசறீங்க, அப்புறம் அவரு ஏதாவது சொல்லிட்டார்ன்னு வருத்தப்படுறீங்க.. இத நம்பாதீங்க எல்லாமே நடிப்பு.. “ என்று அவரிடம் சொல்கிறார். விஷ்ணு ஒருபக்கம் மாயா ஒருபக்கம் எந்த பக்கம் சாய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார் பூர்ணிமா.

பிறகு பூர்ணிமாவுடன் நிற்காமல், நிக்சனிடம் மன்னிப்பு கேட்கிறார். பிறகு மாயாவிடம் சென்று மன்னிப்பு கேட்கிறார் அப்புறம் அனன்யா... இப்படி கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் மாறி மாறி மன்னிப்பு கேட்கிறார் விஷ்ணு.

விசித்திரா கூல் சுரேஷிடம் சென்று, “அண்ணா.. கூல் அண்ணா... என்னை மன்னிச்சிட்டியா அண்ணா” என்று பஞ்ச தந்திரம் தேவயானி போல் கேட்கிறார்.

விஜய் டீவி

விஷ்ணுவைப்போல், இந்த பக்கம் அர்ச்சனாவும் கண்ணில் பட்டவர்கள் எல்லாரிடமும் சாரி கேட்கிறார். விசித்திரா, மாயா, பூர்ணிமா என்று எல்லோரிடமும் குறிப்பாக டைட்டில் வின்னர், விக்ரமிடமும் சாரி கேட்கிறார். மன்னிப்பு கேட்கிறவன் மனுசன் மன்னிக்கதெரிந்தவன் பெரியமனுசன், என்பது போல விக்ரமும் அர்ச்சனாவை மன்னித்துவிட்டு பெரியமனுசனாகி விடுகிறார்.

அடுத்ததாக டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடந்தது. இந்த டாஸ்கில், ஒருத்தர் மணியை எண்ண வேண்டும், ஒருத்தர் நிமிடத்தையும், மற்றொருவர் நொடியையும் கணக்கு செய்ய வேண்டும் இதில் தோற்றால், டைம் பாம் வெடித்து விடும் என்கிறார் பிக்பாஸ்.

விஜய் டீவி

நாம் நினைத்தமாதிரி போட்டியாளர்கள் இந்த டாஸ்கில் தோற்றனர். அதனால் பிக்பாஸ் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் கலந்துக்கொள்ளாமல் இருக்க இருவரை தேர்வு செய்யுமாறு போட்டியாளார்களிடம் கூற, அவர்கள் அர்ச்சனாவையும், விஜய்யையும் தேர்வு செய்தனர். இனி என்ன நடக்க இருக்கிறது என்பதை நாளை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com