பிக்பாஸில் 71-வது நாளான இன்று,
இந்தவாரம் மணி முதல்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றார். நேற்று போட்டியாளர்களை கமல் வறுத்தெடுத்தபின் அவரவர்கள் தங்களின் மேல் இருக்கும் கருமை தோலை நீக்கி ஒற்றுமையாக இருப்பதுபோல தோன்றினாலும், அவரவர் மனதுக்குள் கனல் கழன்றுக்கொண்டுதான் உள்ளது என்பதை நாமினேசன் டாஸ்கில் தெரிந்தது.
நாமினேஷன் டாஸ்கில் trash bin-ல்தான் நாமினேட் செய்யும் நபர்களின் உடுப்புகளை காரணம் கூறி போடவேண்டும். இந்த டாஸ்க்கில் வழக்கம்போல, விஷ்ணு, அனன்யா, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அர்ச்சனா இவர்கள் தேர்வானார்கள். இதில் பூர்ணிமா ஜஸ்ட் மிஸ்ஸில் ஸேவ் ஆனார். இதில் பிக்பாஸ் இறுதியாக அர்ச்சனா பெயரை சொன்னதும், மாயா சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தார். இதைக் கண்ட அர்ச்சனா “ என்ன மாயா, நான் நாமினேஷன்னு சொன்னதும் இப்படி வெறுப்பேத்றாப்புல டான்ஸ் ஆடுறீங்களே...” என்று கேட்டும் விட்டார்.
ஆனால் நம்ம மாயாவுக்கு பேச என்ன கற்றாத் தரவேண்டும்? “இல்லை.. நான் நீங்க நாமினேஷன் என்றதும் ஆடவில்லை. பூர்ணிமா ஸேவானதை நினைத்து ஆடினேன்” என்றார். ஆனால் நாம் புரிந்துக்கொண்டது இது அர்ச்சனாவுக்கான ஆட்டம் என்று. மாயா பேசினதை கேட்ட அர்ச்சனா, இவருடன் பேசி வெற்றி பெறமுடியாது என்று நினைத்து வேறு வழியில்லாமல் அமைதியானார்... இதே போனவார அர்ச்சனாவாக இருந்தால் ஒரு ரகளையை பண்ணியிருப்பார்.
அடுத்து மளிகை சாமான் எடுக்கும் டாஸ்க்கில் கூல் சுரேஷும், விஷ்ணுவும் ஷாப்பிங் செய்தனர். இதில் விஷ்ணு நேற்று நடந்த சம்பவத்தால், மனமுடைந்தும், வறுத்தத்துடனும் இருந்ததால் அவரால் கவனமாக மளிகையை எடுக்கமுடியவில்லை. சக்கரை எடுப்பதை மறந்து வந்துவிட்டார். கேப்டன் மணியோ கவலைபட்ட விஷ்ணுவுக்கு ஆறுதல் கூறியதுடன், ”சர்க்கரை இல்லாட்டினா என்ன.. அட்ஜட்ஸ் பண்ணிக்கொள்ளலாம்” என்று சொன்னாலும் விஷ்ணுவால் அமைதியாக இருக்கமுடியவில்லை; கூல் சுரேஷிடம் புலம்பிக்கொண்டு இருக்கிறார். “எனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை. ஏதோபோல் உள்ளது, எல்லோரையும் பார்க்க கூச்சமாக இருக்கு, நான் தப்பு பண்ணிட்டேன். இனிமே இங்கே விளையாட்டை தொடர முடியுமான்னு தெரியல... பேசாம கிளம்பிடவா? “ என்று கேட்கிறார்.
ஆனால் கூல் சுரேஷோ “இருப்பா, சனிக்கிழமை, நாம ரெண்டு பேரும் போயிடலாம் “ என்கிறார். நேற்று கமல் பேசியது , விஜய் பேசியது.. இதிலிருந்து விஷ்ணுவால் வெளியில் வரமுடியவில்லை என்று நன்றாகவே தெரிகிறது. அவர்தான் செய்த தப்பை உணர்ந்ததுபோல் இருக்கிறார். ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. கடந்த சில வாரங்களில் அவர் உண்மையாகவே பூர்ணிமாவிடம் பழகியிருப்பது தெரிகிறது. பூர்ணிமாவிடம், தான் பேசியது குறித்து மன்னிப்பும் கேட்கிறார். இதில் இருவருமே தன்நிலை மறந்து அழுது விடுகின்றனர். இதன் பிறகு இருவரும் பழையபடி நண்பர்கள் ஆனால், அவர்களின் நட்பு இன்னும் அதிகப்படியாக இறுகும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்... இவர்களின் நப்பு பலப்படுகிறதா அல்லது பலவீனமாகிறதா என்பதை பார்க்கலாம்.
இதற்கிடையில் கூல் சுரேஷை விசித்திரா நாமினேட் செய்தது தெரிந்ததும், அவருக்கு கோபம் வருகிறது. அதை விசித்திராவிடம் காட்டுகிறார். இருவருக்குள்ளும் சிறு உரசல் வருகிறது. விசித்திரா அவரிடம், “நீங்க வீட்ல சொல்லிக்காம வந்துட்டேன், வீட்டுக்கு போகணும்னு சொல்லிட்டு இருக்கீங்க.. அதனால வீட்டுக்கு போயிடுங்க” என்கிறார். இனி என்ன நடக்கும் என்பதை நாளை பார்க்கலாம்.