நடிகர் அஜித் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!

அறுவை சிகிச்சை முடிந்து நடிகர் அஜித் வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்
அஜித்Twitter

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக நடிகர் அஜித் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக தொடங்கின. மருத்துவமனையில் முழு பரிசோதனை செய்யவே அவர் சென்றிருப்பதாக சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்தப் பரிசோதனையின் முடிவில், அவரின் காதின் கீழ் கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. அதையடுத்து அக்கட்டியை அரைமணிநேரத்தில் மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

இந்நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து தற்போது , நடிகர் அஜித் வீடு திரும்பியதாக அஜித்தின் மேளாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் அடுத்தவாரம் முதல் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

அஜித்
வாவ்... இதெல்லாம் அஜித் எடுத்த ஃபோட்டோஸா? வைரலாகும் புகைப்படங்கள்!

மற்றொருபுரம் விடா முயற்சி படப்பிடிப்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது. இந்த சூழலில்தான், நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், மூளையின் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது என்றும் தகவல்கள் பரவ தொடங்கின.

அஜித்
அஜித்துக்கு மூளையில் கட்டியா? 3 மாதம் ஓய்வா? - வைரலான தகவலும், சுரேஷ் சந்திரா சொன்ன உண்மை நிலையும்!
Ajithkumar Bike ride
Ajithkumar Bike ride

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன், “நடிகர் அஜித்துக்கு மூளையில கட்டியெல்லாம் இல்ல, அவர் நார்மல் செக் அப்புக்குதான் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது காதுக்கு கீழே உள்பகுதியில பல்ஜ் என்று சொல்ல கூடிய கட்டி இருப்பதாக சொல்லப்பட்டது. அடுத்த அரைமணிநேரத்துல அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது. மேலும், அவர் டிஸ்சார்ஜ் ஆகிடுவார்” என்று தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com