"ஸ்ரீதேவியின் விருப்பம் இப்போதுதான் நிறைவேறியது.." 26 கிலோ எடையை குறைத்த போனி கபூர்!
நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உடல் எடையை 26 கிலோ குறைத்துள்ளார். மெலிந்த தோற்றத்தில் உள்ள போனி கபூரின் படம் சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்ரீதேவிக்காக செய்த போனி கபூர்..
உடற் பயிற்சி நிலையத்திற்கு செல்லாமல் உணவுப்பழக்க வழக்கங்களை மாற்றியதன் மூலம் மட்டுமே இதை போனி கபூர் சாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரவில் உணவை தவிர்த்து சூப் மட்டுமே அருந்தியதாகவும் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் தான் போனி கபூர் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தார். இந்த சூழலில் தன்னுடைய உடல் எடையை 26 கிலோ வரை குறைத்துள்ளார்.
மறைந்த தன் மனைவி ஸ்ரீதேவி உடல் எடையை குறைக்குமாறும், தலைமுடிக்கான சிகிச்சை எடுக்குமாறும் வற்புறுத்திக்கொண்டே இருந்ததாகவும், அது இப்போதுதான் சாத்தியமாகியுள்ளதாகவும் போனி கபூர் கூறியுள்ளார்.
திரைப்படத் தயாரிப்பாளரான போனி கபூர் சில ஆண்டுகளாக நடிப்பிலும் கவனம் செலுத்திவருகிறார்.