ரூ.1200 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய தொலைக்காட்சி நடிகை.. வணிக உலகில் கோலோச்சி சாதனை!
முன்னாள் தொலைக்காட்சி நடிகை ஒருவர் தனது கடின உழைப்பால் நான்கு ஆண்டுகளில் 1200 கோடி ரூபாய் மதிப்புள்ள ரெனீ காஸ்மெட்டிக்ஸ் அழகுசாதன பிராண்டை உருவாகியுள்ளார்.
வணிக உலகில் கோலோச்சும் தொலைக்காட்சி நடிகை..
நம் நாட்டில் நடிகையாக இருந்து தொழில்முனைவோராக மாறிய சிலரில் ஆஷ்கா கோராடியாவும் ஒருவர். 20 ஆண்டுகளுக்கும் மேல் தொகைக்காட்சித்துறையில் இருந்த ஆஷ்கா, தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருந்த போதும், தொலைக்காட்சித்துறையில் ஆதிக்கம் செலுத்திய போதும், 2021ஆம் ஆண்டு நடிப்பை விட்டு வெளியேறினார்.
பின்னர் வணிக உலகுக்குள் காலடி எடுத்து வைத்த அவர், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் பல்வேறு உயர்மட்ட அழகுசாதன பிராண்டுகளுக்கு சவால் விடுத்து அதில் தற்போது வெற்றியும் அடைந்துள்ளார்.
தன்னுடைய உழைப்பினால் வணிக உலகில் உச்சம் தொட்டுள்ள ஆஷ்கா கோராடியா, 50 லட்ச ரூபாயில் தொடங்கிய தன்னுடைய அழகுசாதன ரெனீ காஸ்மெட்டிக்ஸ் பிராண்டை தற்போது சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்புள்ள சாம்ராஜ்ஜியமாக உருவாக்கி பிரம்மிக்க வைத்துள்ளார்.