“என் பக்கம் தவறே இல்லாதபோது, நான் ஏன் குற்ற உணர்வோடு இருக்கணும்?” - விவாகரத்து பற்றி சமந்தா Open Talk!

சாகுந்தலம் ப்ரமோஷனில் நடிகை சமந்தா தனது விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.
Samantha
Samantha

நடிகை சமந்தா தற்போது சாகுந்தலம் படத்தின் ப்ரோமஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்காக யூட்யூப் தளத்துக்கு அவர் சமீபத்தில் பேசியுள்ளார். அதில் தனது விவாகரத்து குறித்து பேசியுள்ள சமந்தா, “நான் என் திருமண வாழ்வில் என்னுடைய 100 சதவிகித பங்கையும் கொடுத்தேன். ஆனால் அதெல்லாம் அங்கு வேலைசெய்யவில்லை” என்றுள்ளார்.

திருமண முறிவுக்குப்பிறகு அல்லு அர்ஜூன் நடிப்பில் வந்த புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், “நான் அந்த முடிவுக்காக வருந்தவில்லை. உண்மையில் ‘ஊ அன்டாவா’ பாடலுக்கு நான் ஒப்பந்தம் செய்யப்பட்ட போதே, உறவு முறிவின் பாதி நிலையில்தான் நான் இருந்தேன். விவாகரத்தை பொறுத்தவரை, நான் எதையும் மறைக்க விரும்பவில்லை.

முதலில் நான் ஏன் அதை மறைக்க வேண்டும்? நான் எந்த தவறும் செய்யவில்லை! பின் ஏன் மறைக்க வேண்டும்?

சமந்தா

ஏதோ குற்றம் செய்தவரை போல, என் மீதான ட்ரோலிங் – அப்யூஸெல்லாம் பார்த்துவிட்டு எதுவுமே சொல்லாமல் இருந்துவிட்டு, பின் அவையெல்லாம் தன்னால் மறையும் வரை காத்திருந்து, பின் மெதுவாக வெளியே வருவதை நான் விரும்பவில்லை. நிச்சயமாக நான் அதை செய்யவும் மாட்டேன்.

Samantha
Samantha
நான் என் திருமண வாழ்வில், 100 சதவிகித பங்கையும் கொடுத்தேன். ஆனால் அது அங்கு செயல்படவில்லை.
சமந்தா
Samantha
Samantha

அப்படியிருக்க நான் செய்யாத விஷயத்துக்காக, நானே என்னை தண்டித்துக்கொள்ளவோ, குற்ற உணர்வுடனேவோ இருக்க முடியாது” என்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com