யார் இந்த மீனாட்சி சவுத்ரி? 26 வயதில் விஜய்க்கு ஜோடியானது எப்படி?

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகை மீனாட்சி சவுத்ரி, தளபதி 68 படத்தில் இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அவர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கே பார்ப்போம்!
Meenakshi Chaudhary
Meenakshi Chaudharyfile image

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் விஜய் இணையும் முதல் படமான தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ இன்று வெளியாகியுள்ளது. படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் நிலையில், அதுகுறித்த அறிவிப்புகள் யூகங்களாக முன்னரே வெளியாகியிருந்தன. படத்தில் விஜய் தந்தை - மகனாக நடிக்க இருப்பதாக பேசப்படும் நிலையில், பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த தகவல்கள், இன்று வெளியான வீடியோ மூலமாக கிட்டத்தட உறுதியாகியுள்ளது.

Meenakshi Chaudhary
வெளியானது தளபதி 68 பூஜை வீடியோ... குஷியில் ரசிகர்கள்..!

இந்நிலையில், யார் இந்த மீனாட்சி சவுத்ரி, இவரது பின்னணி என்ன என்று நெட்டிசன்கள் பலரும் சமூகவலைதளங்களில் தேடிவருகிறது. தனது 26வது வயதிலேயே விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள மீனாட்சி சவுத்ரியின் பூர்வீகம் ஹரியானா. மாநில அளவில் நீச்சல் வீராங்கனையாகவும், பேட்மிண்டன் வீராங்கனையாகவும் திகழ்ந்த மீனாட்சி, பல் மருத்துவத்தில் இலங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறி வரும் இவர், மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டுவராகவும் இருந்து வருகிறார். 2017ல் MISS IMA, 2018ல் FEMINA MISS INDIA பட்டங்களை வென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, Out of Love என்ற வெப் சீரிஸ் மூலம் திரைத்துறையில் எண்ட்ரி ஆனார். அதுமுதல், 3 தெலுங்கு படங்களில் நடித்த இவர், விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்ததாக சிங்கப்பூர் சலூன் என்ற படத்திலும் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்திலும் நடித்து வருகிறார்.

கில்லாடி, ஹிட் போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ள மீனாட்சி, தளபதி 68 படத்தில் இணைந்தன் மூலம் சினிமா வட்டாரத்தில் அதிகம் கவனிக்கப்படும் நடிகையாக மாறியுள்ளார். தான் விஜய்யின் தீவிர ரசிகை என்று அவரே பேட்டியில் கூறிய வீடியோ ஒன்றும் தற்போது வைரலாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com