DEAR | Fallout | Romeo | Aavesham | Varshangalkku Shesham
DEAR | Fallout | Romeo | Aavesham | Varshangalkku SheshamCANVA

DEAR | Fallout | Romeo | Aavesham | Varshangalkku Shesham ... உங்கள் சாய்ஸ் என்ன..?

ரம்ஜான் பண்டிகையையொட்டி வியாழன் அன்று நிறைய படங்கள் திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.

Fallout (English) Prime - Apr 11

Fallout
FalloutPrime

Jonathan Nolan இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Fallout’. எதிர்கால உலகில் அனுக்கதிர் பாதிப்பால் அனைத்தும் சிதைந்து கிடைக்கிறது. குடிமக்கள் தங்களை அனுக்கதிர் பாதிப்பால் மாற்றமடைந்த உயிரினங்களிடமிருந்தும், கொள்ளையர்களிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்ள பதுங்குகுழிகளில் தங்கியிருக்கிறார்கள். அந்தக் குழுவிலிருந்து லூசி என்ற பெண் வந்து செய்யும் செயல்கள் என்ன என்பதே கதை.

Amar Singh Chamkila (Hindi) Netflix - Apr 12

Amar Singh Chamkila
Amar Singh Chamkila Netflix

இம்தியாஸ் அலி - ஏ ஆர் ரஹ்மான் கூட்டணியில் தில்ஜித், பரினீதி சோப்ரா நடித்திருக்கும் படம் `Amar Singh Chamkila’. 1960 - 88 காலகட்டத்தில் வாழ்ந்த இசைக் கலைஞர்தான் அமர் சிங் சம்கீலா. இவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களே படத்தின் கதை.

The Greatest Hits (English) Hotstar - Apr 12

The Greatest Hits
The Greatest HitsHotstar

Ned Benson இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `The Greatest Hits’. ஹாரியட்டின் காதலன் விபத்து ஒன்றில் இறந்து விடுகிறார். ஆனால் அவள் கேட்கும் சில பாடல்கள் இவளை காலப்பயணம் செய்ய வைத்து, அவளின் காதலனுடன் இருந்த தருணங்களுக்கு கொண்டு செல்கிறது. இதன் பின் என்ன நிகழ்கிறது என்பதே படம்.

Woody Woodpecker Goes to Camp (English) Netflix - Apr 12

Woody Woodpecker Goes to Camp
Woody Woodpecker Goes to CampNetflix

2017ல் வெளியான Woody Woodpecker படத்தின் சீக்குவல் தான் Woody Woodpecker Goes to Camp. இந்த முறை வுட்டி வுட்பெக்கர் காட்டில் இருந்து துரத்தப்பட்டதால், ஒரு புதிய அடைக்கலத்தை கண்டுபிடிக்க வேண்டும். அப்படி ஒரு இடமும் கிடைக்கிறது. ஆனால் அந்த இடமே மொத்தமாக அழியும் சூழல் உருவாகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

Gaami (Telugu) Zee5 - Apr 12

Gaami
GaamiZee5

வித்யாதர் இயக்கத்தில் விஷ்வாக் சென் நடித்த படம் `Gaami'. ஷங்கர் தனது வினோதமான வியாதிக்கான மருந்தை தேடி, இமாலயத்திற்கு செல்கிறான். அவனது அட்வெஞ்சர் பயணமே கதை.

Om Bheem Bush (Telugu) Prime - Apr 12

Om Bheem Bush
Om Bheem BushPrime

`Hushaaru’ மூலம் கவனம் கவர்ந்த ஸ்ரீ ஹர்ஷா இயக்கிய படம் `Om Bheem Bush'. மூன்று சைண்டிஸ்ட்கள் புதையலைத் தேடி பைரவபுரம் செல்கிறார்கள். ஆனால் அங்கு அவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சியை காமெடியாக சொல்கிறது படம்.

Premalu (Malayalam) Hotstar - Apr 12

Premalu
PremaluHotstar

Thanneer Mathan Dinangal, Super Sharanya என இரண்டு சிறப்பான படங்களைக் கொடுத்த கிரிஷ், அடுத்து இயக்கிய படம் `Premalu'. சச்சினுக்கு ரீனு மேல் காதல், அந்தக் காதலை சொல்ல அவன் படும் பாடுகளும், காமெடிகளுமே கதை.

Maidaan (Hindi) - Apr 10

Maidaan
Maidaan

`Badhaai Ho’ படத்தை இயக்கிய Amit Sharma இயக்கி அஜய் தேவ்கன் நடித்துள்ள படம் `Maidaan’. இந்திய கால்பத்து பயிற்சியாளர் Syed Abdul Rahim வாழ்க்கை நிகழ்வுகளையும், அவர் இந்திய கால்பந்து அணியை எப்படி தயார் செய்தார் என்பதைத் தழுவி உருவாகியிருக்கிறது படம்.

Romeo (Tamil) - Apr 11

Romeo
Romeo

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி நடித்துள்ள படம் `ரோமியோ’. மனைவியின் அன்பைப் பெற கணவன் படும் பாடுகளே கதை.

Dear (Tamil) - Apr 11

Dear
Dear

`செத்தும் ஆயிரம் பொன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் `டியர்’. புதுமணத் தம்பதி இடையே குறட்டைப் பிரச்சனை பூகம்பமாக வெடிக்கிறது. அது எப்படி சரியானது என்பதே கதை.

Geethanjali Malli Vachindi (Telugu) - Apr 11

Geethanjali Malli Vachindi
Geethanjali Malli Vachindi

அஞ்சலி நடிப்பில் வெளியாகும் 50வது படம் `Geethanjali Malli Vachindi'. பாழடைந்த பங்களா ஒன்றில் ஹாரட் படத்தின் படப்பிடிப்பு நடத்த செல்கிறது ஒரு குழு. அங்கு நிஜமாகவே பேய் இருப்பது தெரிந்த பின் என்ன ஆகிறது என்பதே கதை.

Aavesham (Malayalam) - Apr 11

Aavesham
Aavesham

`Romancham’ படம் மூலம் கவனம் ஈர்த்த Jithu Madhavan இயக்கி ஃபகத் பாசில் நடித்திருக்கும் படம் `Aavesham’. ஒரு கேங்க்ஸ்டரைப் பற்றிய படமாக உருவாகியிருக்கிறது.

Varshangalkku Shesham (Malayalam) - Apr 11

Varshangalkku Shesham
Varshangalkku Shesham

`Hridayam' பட ஹிட்டுக்குப் பிறகு Vineeth Sreenivasan இயக்கியுள்ள படம் `Varshangalkku Shesham'. சென்னை மெட்ராஸாக இருந்த காலத்தில், இங்குள்ள சினிமா உருவாக்கம் பற்றியும், அதில் பணியாற்ற வந்த சில நண்பர்கள் பற்றிய கதை.

Jai Ganesh (Malayalam) - Apr 11

Jai Ganesh
Jai Ganesh

Ranjith Sankar இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடித்திருக்கும் படம் `Jai Ganesh'. வீல் சேரிலேயே வாழ்க்கையை கழிக்கும் கணேஷ், தன் மீது காண்பிக்கப்படும் கருணையால் மிகுந்த சோர்வுக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாகிறார். அவர் எப்படி மீள்கிறார் என்பதே கதை.

Bade Miyan Chote Miyan (Hindi) - Apr 11

Bade Miyan Chote Miyan
Bade Miyan Chote Miyan

பாலிவுட் கமர்ஷியல் பட இயக்குநர் Ali Abbas Zafar இயக்கத்தில் அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப், ப்ரித்விராஜ் நடித்துள்ள படம் `Bade Miyan Chote Miyan'. ஃபிரோஸ் - ராகேஷ் என்ற இரு வீரர்கள், மிக ஆபத்தான ஆயுதங்களை ஒரு பயங்கரவாதியிடமிருந்து மீட்டு வர அனுப்பப்படுகிறார்கள். அவர்களின் சாகசப்பயணமே படம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com