G.O.A.T. படப்பிடிப்பு தளத்தில் குவிந்த கேரள ரசிகர்கள்... செல்ஃபி எடுத்து கொண்டாடிய விஜய்!

G.O.A.T. படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு அருகே ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
கேரளாவில் விஜய் ரசிகர்களுடன் செல்ஃபி
கேரளாவில் விஜய் ரசிகர்களுடன் செல்ஃபிட்விட்டர்

14 ஆண்டுகள் கழித்து படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் நேற்று முன்தினம் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டு காவலன் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்ற விஜய் அதன் பின் எந்த படப்பிடிப்புக்கும் அங்கு செல்லவில்லை. தற்போது வெங்கட் பிரபு இயக்கும் G.O.A.T. படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ளார்.

கேரளாவில் விஜய்
கேரளாவில் விஜய்ட்விட்டர்

அதன்படி திங்கட்கிழமை திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றடைந்த விஜய்யை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அவரது காரை நகரவிடாத அளவுக்கு கூடிய ரசிகர்கள் கூட்டத்தால், கார் கண்ணாடி உடைந்து கார் பலத்த சேதம் அடைந்தது. இதனையடுத்து திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தில் G.O.A.T. படத்தின் நேற்று படப்பிடிப்பு நடைபெற்றது.

கேரளாவில் விஜய் ரசிகர்களுடன் செல்ஃபி
த.வெ.க தலைவர் விஜய்யை சூழ்ந்த கேரள ரசிகர்கள்... உற்சாக வரவேற்பில் உடைந்த கார் கண்ணாடி...!

அப்போது மைதானத்துக்கு வெளியே விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து மைதானத்துக்கு வெளியே வந்த விஜய் வாகனத்தின் மீது ஏறி ரசிகர்களை பார்த்து கையசைத்தார். தொடர்ந்து ரசிகர்களுடன் விஜய் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. GOAT படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நான்கு நாட்கள் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com