\
Actor Suriya Praises Mandaadi movie director and producer
Suriya & SooriInstagram

23-ஆவது நாளிலும் பறந்த விசில்.. ‘மண்டாடி’யைப் பாராட்டிய சூர்யா!

இயக்குநர் மதிமாறன் புகழேந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘மண்டாடி’ திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பான படைப்பு என்று சூர்யா பாராட்டியுள்ளார்.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் வெளியாகி 23 நாட்கள் கடந்துள்ள நிலையில், பல காட்சிகள் தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா, ‘மண்டாடி’ படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோருக்கு சூர்யா தனித்தனியாக வாழ்த்துக் கடிதங்களை அனுப்பியுள்ளார்.

Suriya
SuriyaInstagram

தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு எழுதிய கடிதத்தில், ‘மண்டாடி’ படத்தின் கதை மற்றும் அதன் உருவாக்கத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை சூர்யா பாராட்டியுள்ளார்.

Actor Suriya Praises Mandaadi movie director and producer
மண்டாடி 140 கோடி ரூபாய் வசூல்.. மங்காத்தா, துப்பாக்கி வசூலை விஞ்சி சாதனை!

வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படத்தைத் தயாரிக்க துணிச்சலும், தொலைநோக்குப் பார்வையும் தேவை என்றும், அதை எல்ரெட் குமார் சிறப்பாக செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படத்திற்குக் கிடைத்துள்ள வெற்றி, படக்குழுவினரின் கடின உழைப்புக்குக் கிடைத்த சரியான அங்கீகாரம் என்றும் சூர்யா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மதிமாறன் புகழேந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘மண்டாடி’ திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பான படைப்பு என்று சூர்யா பாராட்டியுள்ளார்.

mandaadi
mandaadimandaadi

படத்தைத் திரையரங்கில் வந்து பார்ப்பதில் தனக்கு தாமதம் ஏற்பட்டதாகவும், ஆனால் 23-ஆவது நாளில் ரசிகர்களின் விசில் மற்றும் கைதட்டல்களுக்கு மத்தியில் படத்தைப் பார்த்த அனுபவம் தன்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தின் திரைக்கதை, இயக்கம் மற்றும் தொழில்நுட்பப் பணிகள் சிறப்பாக இருந்ததாகப் பாராட்டிய சூர்யா, மதிமாறன் புகழேந்தியின் வெற்றி தனக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாக கூறியுள்ளார்.

Actor Suriya Praises Mandaadi movie director and producer
‘மண்டாடி’ ரூ.100 கோடி வசூல்.. வரலாறு படைத்த சூரி! டாப் 5 லிஸ்ட்டில் இடம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com