வெப்ப வாதம்... நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது?

கொல்கத்தா அணியின் உரிமையாளரும் பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான நடிகர் ஷாருக்கான் வெப்பவாதத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்றபின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
#BREAKING | மருத்துவமனையில் நடிகர் ஷாருக்கான் அனுமதி
#BREAKING | மருத்துவமனையில் நடிகர் ஷாருக்கான் அனுமதி pt web

நேற்று (மே 21) நடந்த கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் இடையே நடந்த போட்டியைக் காண, இரண்டு நாட்களுக்கு முன்பே அகமதாபாத் சென்றிருந்தார் கொல்கத்தா அணியின் உரிமையாளரும் பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான நடிகர் ஷாருக்கான். இந்நிலையில் போட்டியை காண நேற்று மைதானம் சென்றிருந்த அவர், வெப்பவாதத்தால் பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள கே.டி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நேற்று போட்டி முடிந்ததும் ஷாருக்கான் அணியினருடன் அகமதாபாத்திலுள்ள ஐடிசி நர்மதா ஹோட்டலுக்கு சென்றுள்ளார். பின் இன்று காலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மதியம் 1 மணியளவில் கே.டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் என் தெரிகிறது. அங்கு முதன்மை சிகிச்சைக்குப் பிறகு இன்று சில மணி நேரத்துக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

#BREAKING | மருத்துவமனையில் நடிகர் ஷாருக்கான் அனுமதி
உயிருக்கே ஆபத்தாகும் Heat stroke - அறிகுறிகள் என்னென்ன? தற்காப்பது எப்படி?

இதுதொடர்பாக IANS செய்தி நிறுவனம், “ஷாருக்கான் அகமதாபாத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், நீரிழப்பால் (dehydration) அவதிப்பட்டார்” என தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பிறப்பகுதிகளைப் போலவே அகமதாபாத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. குஜராத்தின் தலைநகரில் சுமார் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. மேற்கொண்டு அடுத்த சில தினங்களுக்கு வட மாநிலங்களுக்கு வெப்பச்சலனத்துக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#BREAKING | மருத்துவமனையில் நடிகர் ஷாருக்கான் அனுமதி
5 நாட்களுக்கு வட மாநிலங்களில் வெப்ப அலைக்கான ரெட் அலர்ட்; வானிலை ஆய்வு மையம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com