5 நாட்களுக்கு வட மாநிலங்களில் வெப்ப அலைக்கான ரெட் அலர்ட்; வானிலை ஆய்வு மையம்

டெல்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை
வட மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கைpt web

வடமாநிலங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் அடுத்து வரக்கூடிய 5 நாட்களுக்கு டெல்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாநிலங்களில் பகல் நேரங்களில் 45 டிகிரி முதல் 47 டிகிரி வரை வெப்பநிலை இருக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை பொதுமக்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் எனவும், தேவையான அளவு நீராகாரங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

வட மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை
வங்ககடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தவிர்க்க முடியாத காரணங்களில் அவர்கள் வெளியில் சென்றாலும் கூட வெள்ளை நிற ஆடைகளை அணிந்து செல்லவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com