\
உடற்பயிற்சி செய்யும்போது கீழே விழுந்து காயம்: நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

உடற்பயிற்சி செய்யும்போது கீழே விழுந்து காயம்: நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

உடற்பயிற்சி செய்யும்போது கீழே விழுந்து காயம்: நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி
Published on: 

உடற்பயிற்சி செய்யும்போது நடிகர் கார்த்திக்கிற்கு காலில் அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குநர் தியாகராஜனின் ‘அந்தகன்’ படத்தில் நடித்துவரும் நடிகர் கார்த்திக், சமீபத்தில்தான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனார். இந்த நிலையில், மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தனது வீட்டில் உடற்பயிற்சி செய்யும்போது கீழே விழுந்ததில் கார்த்திக்கிற்கு காலில் அடிப்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை ஸ்கேன் எடுத்துப் பார்த்துள்ளனர் மருத்துவர்கள். ஏற்கனவே, சில ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக்கிற்கு அறுவை சிகிச்சை செய்த காலிலேயே, மீண்டும் தற்போது அடிப்பட்டுள்ளதால் எலும்பில் விரிசல் ஏற்பட்டதைப் கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர் மருத்துவர்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com