ஜனநாயகன் | ”Delayed but not Defeated..” விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா!
சினிமாவை விட்டுவிட்டு முழுமையாக அரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் விஜய் நடிப்பில் கடைசித் திரப்படமாக உருவாகியிருக்கும் படம் `ஜனநாயகன்'. ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படம் ஜனவரி 9ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து இழுபறி நடந்துவரும் நிலையில், தணிக்கை சான்றிதழ் பெருவதற்கு பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி 9ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கை சான்றிதழ்க்காக டிசம்பர் 19ஆம் தேதியே அனுப்பப்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்பே அனுப்பப்பட்ட போதும் இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்துவருகிறது.
இந்தவழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவிருக்கும் நிலையில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நீங்கள் உண்மையிலேயே ஜனங்களின் நாயகன்தான்..
ஜனநாயகன் திரைப்படத்திற்காக நடிகர் சிபி சத்யராஜ், வெங்கட்பிரபு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் முதல் காங்கிரஸ் தலைவர்கள் வரை குரல் கொடுத்துள்ளனர். அந்தவகையில் நடிகர் ஜீவாவும் ஜனநாயகன் திரைப்படத்திற்காகவும், நடிகர் விஜய்க்காகவும் குரல் கொடுத்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், "ஒரு விஷயத்தின் காத்திருப்பு அதிகமாகும்போதுதான், அதன் தாக்கம் பெரிதாகிறது. என்றும் உங்களுடன் இருக்கிறோம் விஜய் அண்ணா. நீங்கள் உண்மையிலேயே ஜனங்களின் நாயகன். தாமதாகதான் வருகிறோம், ஆனால் இன்னும் தோற்று போகவில்லை” என பதிவிட்டுள்ளார். இன்று ஜனநாயகன் படத்திற்கு சென்சார் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் படக்குழுவும், ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

