\
mamitha baiju
mamitha baijumamitha baiju instagram

ஒரே மாதத்தில் ரூ.800 கோடி வசூல்.. முதல் தென்னிந்திய நடிகை மமிதா பைஜு! உச்சகட்ட சாதனை!

மமிதா பைஜுவின் நடிப்பில் ஒரே மாதத்தில் வெளியான 3 படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் 800 கோடி ரூபாய்க்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைகளுக்கு பிறகு IMDb-யின் சமீபத்திய 'Trending People' பட்டியலில் முதலிடம் பிடித்தார் மமிதா பைஜு.
Published on
Summary

ஒரே ஆண்டில் மூன்று படங்கள் மூலம் உலகளவில் 800 கோடி ரூபாய் வசூல் செய்து, தென்னிந்தியாவில் முதல் முறையாக இந்த சாதனையை படைத்த நடிகையாக மமிதா பைஜு உயர்ந்துள்ளார். விஜய்யுடன் ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் ‘விஸ்வநாத் & சன்ஸ்’, நிவின் பாலியுடன் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்கள் 200 கோடி கிளப்பை தாண்டி, IMDb பட்டியலிலும் அவர் முதலிடத்தை பிடிக்க வைத்துள்ளன.

அடுத்தடுத்து மூன்று படங்கள், மூன்று பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகள் மற்றும் உலகளவில் சுமார் 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் என, மமிதா பைஜுவுக்கு 2026 ஒரு கனவு ஆண்டாக மாறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பிரம்மிக்க வைக்கும் வெற்றிகளுடன் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் வாமிகா கப்பி போன்ற பெரிய பெயர்களைப் பின்னுக்குத் தள்ளி, மமிதா பைஜூ IMDb-யின் சமீபத்திய 'இந்தியாவில் பிரபலமாகி வரும் நபர்கள்' பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

Jana Nayagan
Jana NayaganJana Nayagan

மமிதாவின் சமீபத்திய வெற்றிப் பயணம், அவர் விஜய்யுடன் இணைந்து நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்துடன் தொடங்கியது. ஜூலை 23 அன்று வெளியான இந்தத் தமிழ்த் திரைப்படம், உலகளவில் ரூ. 324 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடருந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு, சூர்யாவுடன் சேர்ந்து அவர் நடித்த 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படமும் வசூலில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அப்படத்தில் மமிதாவின் துறுதுறு நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இப்படம் உலகளவில் ரூ. 200 கோடி வசூலைக் கடந்து சாதித்தது.

Vishwanath and Sons
Vishwanath and Sons Vishwanath and Sons

இந்த 2 படங்களுக்கு பிறகு நிவின் பாலிக்கு ஜோடியாக மலையாளத் திரைக்கு திரும்பிய மமிதா பைஜுவின் நடிப்பில், அடுத்த ஹிட் திரைப்படமாக 'பெத்லகேம் குடும்ப யூனிட்' வெளிவந்தது. ஆகஸ்ட் 21 அன்று வெளியான இப்படம், சமீபத்தில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

mamitha baiju
”அடுத்த தலைமுறைக்கு ஆபத்தான அரசியல்..” அட்லீ பேச்சுக்கு போஸ் வெங்கட் பதில்!

இந்தசூழலில் தான் அடுத்தடுத்த 3 படங்களில் 200 கோடி ரூபாய்க்கு வசூல் கொடுத்து புதிய சாதனையை மமிதா பைஜூ படைத்துள்ளார். இதன்மூலம் ஒரே ஆண்டில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த 3 படங்களை கொடுத்த முதல் தென்னிந்திய நடிகையாகவும், 3வது இந்திய நடிகையாகவும் மாறியுள்ளார் மமிதா பைஜு. இச்சாதனையை தீபிகா படுகோன், ஆலியா பட்டிற்கு பிறகு மமிதா செய்துள்ளார். இதை செய்யும் முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையையும் மமிதா பெற்றுள்ளார்.. அவருடைய 3 படங்களின் மொத்த உலகளாவிய வசூல் 800 கோடி ரூபாயாக உள்ளது. இது அவரது திரை வாழ்க்கையில் உச்சபட்ச வெற்றியாக மாறியுள்ளது.

'பிரேமலு' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மமிதா பைஜூ, தமிழில் நடித்த ‘DUDE’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் ஈர்த்தார். 100 கோடி, 200 கோடி, 300 கோடி என மமிதாவின் ஆர்க் உயர்ந்துகொண்டே இருக்கும் சூழலில், அவருடைய திரைப்பயணம் அவரை ஒரு நம்பிக்கைக்குரிய இளம் நடிகை என்ற நிலையிலிருந்து, திரையுலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட முகமாக தற்போது மாற்றியுள்ளது.

mamitha baiju
“எந்த நபரையும் குறிப்பிட்டு பேசவில்லை..” சமீபத்திய சர்ச்சை குறித்து விஜய்சேதுபதி விளக்கம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com