குறையும் தங்கம் விலை
குறையும் தங்கம் விலைweb

இவ்வளவு கம்மியாவா..? வரலாறு காணாத அளவில் உயர்ந்து.. மொத்தமாக சரிந்த தங்கம் விலை?

நேற்று ஒரே நாளில் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், திடீரென விலை குறைந்துள்ள சம்பவம் தான் தங்கம் வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..எவ்வளவு குறைந்துள்ளது..தங்கம் வாங்க இது தான் சரியான நேரமா பார்க்கலாம்!
Published on

சர்வதேச பொருரளாதார சூழல்..உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்ட போர் பதற்றம், அமெரிக்காவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையயை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன..

இதன் காரணமாகவே தங்கத்தில் விலை அண்மைக்காலமாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

Gold Rate  Chennai
Gold Rate Chennai

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவிஏற்றதும் தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் போயின.

ஏழை எளிய மக்களுக்கு தங்கம் வாங்குவது கானல் நீராகவே மாறிவிட்டது.

குறையும் தங்கம் விலை
”நான் சீனா செல்லும் நாள் தொலைவில் இல்லை” - டொனால்ட் டிரம்ப்

குறையும் தங்கம் விலை..

சென்னையில் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக காணப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 1 ஆ ம் தேதி ஒரு சவரன் 71, 360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அடுத்த 15 நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 74,560 ரூபாய்க்கு விற்பனையானது,.அதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்களாக படிப்படியாக கிடுகிடுவென உயர்ந்து தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி கொடுத்தது.

தங்கம் விலை
தங்கம் விலைpt

குறிப்பாக நேற்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 760 ருபாய் உயர்ந்து ஒரு சவரன் 75,040 ரூபாய்க்கு விற்பனை ஆகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது..கடந்த ஒரே வாரத்தில் மட்டும் ஒரு சவரனுக்கு 2,240 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது.

இந்த நிலையில் மீண்டும் திடீரென இன்று கிராமுக்கு 125 ருபாய் குறைந்து 9,255 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது..அதாவது ஒரு சவரனுக்கு 1000 ருபாய் குறைந்து 74,040 ரூபாய்க்கு விற்பனையாகிவருவது தங்கம் வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியயை ஏற்படுத்தியுள்ளது.

குறையும் தங்கம் விலை
தங்கம் விலைக்கு சற்றும் சளைக்காத வெள்ளி.. வரலாறு காணாத அளவு உயர்வு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com