அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் web

”நான் சீனா செல்லும் நாள் தொலைவில் இல்லை” - டொனால்ட் டிரம்ப்

சீனா செல்லும் நாள் தொலைவில் இல்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Published on

சீனாவிற்கு தான் செல்லும் நாள் தொலைவில் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். சீனா தற்போது முக்கியமான சில பொருட்களை அமெரிக்காவிற்கு அனுப்பத்தொடங்கிவிட்டதாகவும் இரு நாடுகளுக்கும் நல்லுறவு ஏற்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

வணிக யுத்தம் to வலுப்பெற்ற நல்லுறவு! 

இரு நாடுகளுக்கும் வணிக யுத்தம் நடந்துவருவதாக கருதப்பட்ட நிலையில் தற்போது நட்பு வலுப்பட்டுள்ளதாகவும் சீனா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளது கவனம் பெறுகிறது.

இதற்கிடையே ஜப்பானுக்கான பதில் வரியை 25இல் இருந்து 15% ஆக குறைத்துள்ளதாகவும் பதிலுக்கு அந்நாடு அமெரிக்காவில் 550 பில்லியன் முதலீடு செய்யும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

சீனா, அமெரிக்கா
சீனா, அமெரிக்காஎக்ஸ் தளம்

இதே போல பிலிப்பைன்சுக்கு விதிக்கப்பட்ட பதில் வரி 20%இல் இருந்து 19 விழுக்காடாக குறைக்கப்படும் என்றும் அதே நேரம் அமெரிக்க பொருட்களுக்கு பிலிப்பைன்ஸ் வரி எதுவும் விதிக்காது என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். இந்தியாவுடன் வணிக ஒப்பந்தம் இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கும் நிலையில் இது பற்றி பேச அடுத்த மாதம் அமெரிக்க குழு இந்தியா வர உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com