வெள்ளி விலை உயர்வு
வெள்ளி விலை உயர்வுpt

தங்கம் விலைக்கு சற்றும் சளைக்காத வெள்ளி.. வரலாறு காணாத அளவு உயர்வு!

தங்கம் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவரும் நிலையில், அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் வெள்ளி விலையும் வரலாறு காணாதளவில் ஏற்றம் கண்டுள்ளது.
Published on

சென்னையில் வெள்ளி விலை வரலாறு காணாத ஏற்றம் கண்டுள்ளது. தங்கம் விலையும் ஒரு சவரன் மீண்டும் 73 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 65 ரூபாய் விலை உயர்ந்து 9 ஆயிரத்து 140 ரூபாய்க்கும், ஒரு சவரன் 520 ரூபாய் விலை அதிகரித்து 73 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவாக ஒரு கிராம் 4 ரூபாய் உயர்ந்து 125 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com