texas man tears indian flag web
உலகம்

Texas-ல் இந்தியக் கொடியைக் கிழித்த நபர்.. சீற்றத்தை ஏற்படுத்திய வைரல் வீடியோ!

அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த ஒருவர் இந்தியக் கொடியைக் கிழிக்கும் காட்சி அடங்கிய வீடியோ இணையத்தில் பெரும் கொந்தளிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளியினர் அதிகமாக குடியேறி இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒருவர் இந்திய கொடியை கிழித்த வீடியோ வைரலாகிவருகிறது.

டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், ஆரவாரம் செய்யும் கூட்டத்தின் முன் இந்திய தேசியக் கொடியைக் கிழிக்கும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்று, இணையத்தில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொளியை @ElijahSchaffer என்ற பயனர் X தளத்தில் பகிர்ந்துள்ளார், அது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Texas man tears Indian Flag

அந்தப் பதிவின்படி, இந்தச் சம்பவம் டெக்சாஸின் ஃபிரிஸ்கோ (FRISCO) நகரில் நிகழ்ந்துள்ளது. அங்கிருக்கும் சிட்டி ஹாலுக்கு வெளியே வாயில் சிகரெட்டுடன் நின்றுகொண்டிருக்கும் ஒருவர், இந்தியக் கொடியைக் கிழிப்பதை அந்தக் காணொளியில் பார்க்கலாம். கொடியை கிழிக்கும் போது அவரை எல்லோரும் சேர்ந்து உற்சாகமூட்டுகிறார்கள்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வடக்கு டல்லாஸில் இந்தியர்கள் அதிகமாக குடியேறி இருப்பதால் அங்கிருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்காததால் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது .

டெக்சாஸ் மாநிலத்தில் 5,70,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். அமெரிக்காவிலேயே மிகப்பெரிய இந்திய மக்கள் தொகையைக் கொண்ட இடங்களுள் ஒன்றாக டெக்ஸாஸ் விளங்குகிறது. Dallas-Fort Worth (DFW) மற்றும் Houston போன்ற முக்கியப் பெருநகரப் பகுதிகளில் அதிக இந்தியர்கள் வாழ்கிறார்கள். இதனால் இந்தியர்களை எதிர்த்து அடிக்கடி போராட்டங்கள் நடந்தவாறு இருக்கிறது.

மற்றுமொரு காணொளியில் டெக்சாஸை இந்துக்கள் கைப்பற்றுவதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று எழுதப்பட்ட டிஜிட்டல் பிரச்சார வாகனம் டெக்ஸாஸில் பரப்புரைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

டெக்ஸாசில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருவதாகவும் அவர்களின் தேசிய கொடிகளும் இவ்வாறு கிழிக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.