\
Iran Erupts in Anger After Israeli Strike, Suspends Negotiations
iran war web

இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்.. பேச்சுவார்த்தை நிறுத்தி வைப்பு.. கொந்தளிக்கும் ஈரான்!

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஈரான் நிறுத்தியதுடன், ஹார்முஸ் முற்றுகையை தீவிரப்படுத்தப்போவதாக சூளுரைத்துள்ளது.
Published on

செய்தியாளர் : M. மீரா

மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதன் காரணமாக 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. போரை நிரந்தரமாக நிறுத்தும் பேச்சுவார்த்தைகளும் இழுபறியாகவே இருந்து வந்தது.

போர் நிறுத்தம் குறித்த ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையில் பல்வேறு கோரிக்கைகள் இருக்கும் நிலையில் அதில் ஈரானின் ஒரு கோரிக்கையாக லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது .

Israel strikes Beirut
Israel strikes Beirut web

இதற்கிடையே அமெரிக்கா மத்தியஸ்தராக செயல்பட்டு இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தத்தை அறிவித்தது. இருப்பினும் இரு தரப்பினரும் அடிக்கடி தாக்குதலை நடத்தி வந்தனர். ஈரான் - அமெரிக்கா நிரந்தர போர் நிறுத்தத்துக்கான முயற்சிகள் நடந்து கொண்டிருந்தபோதும், பெய்ரூட் மீதான இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஹிஸ்பொல்லாவின் ராக்கெட் தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேல்–லெபனான் மோதல் மீண்டும் தீவிரமடைந்தது.

இந்தச் சூழலில் , மே 31 ஆம் தேதி லெபனான் நாட்டில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க, 900 ஆண்டுகள் பழமையான பியூஃபோர்ட் கோட்டையை (Beaufort Castle/Qal'at al-Shaqif) ஹிஸ்புல்லாக்கள் தங்கள் தாக்குதல் தளமாகப் பயன்படுத்தி வந்ததால், இஸ்ரேலியப் படைகள் தீவிர தரைவழித் தாக்குதல் நடத்தி கோட்டையை கைப்பற்றி தங்கள் கொடியை ஏற்றியுள்ளனர்.

israel flag at Lebanon's Beaufort Castle
israel flag at Lebanon's Beaufort Castleweb

இவ்வாறு லெபனானில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல் தீவிரமடைந்ததன் காரணமாக, அமெரிக்காவுடனான அனைத்துப் பேச்சுவார்த்தைகளையும் மறைமுக உரையாடல்களையும் ஈரான் நிறுத்தி வைத்துள்ளதாக தஸ்னிம் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் முழுமையாகத் தடை விதிக்கவும் , பாப் அல்-மண்டாப் ஜலசந்தி உட்பட மற்ற முனைகளில் தாக்குதலைத் தீவிரப்படுத்தவும் ஈரான் முடிவு செய்துள்ளதாகவும் அச்செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

Iran Erupts in Anger After Israeli Strike, Suspends Negotiations
ஈரான் போர் | அதிகாரம், எண்ணெய், செல்வாக்கு – யார் யாருக்கு என்ன வேண்டும்?

மேலும் காசா மற்றும் லெபனானில் சியோனிச ஆட்சியின் (இஸ்ரேல்) இராணுவம் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு மற்றும் கொடூரமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதும், லெபனானில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறுவதும் அவசியம் என்று ஈரானிய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் ஈரானின் நிலைப்பாடு முழுமையாக நிறைவேற்றப்படாத வரை, எவ்விதப் போர் நிறுத்த பேச்சுவார்த்தையும் நடைபெறாது என்றும் கூறப்பட்டுள்ளது.

Iran Erupts in Anger After Israeli Strike, Suspends Negotiations
'அமெரிக்காவுடன் அணுசக்திப் பேச்சுவார்த்தை இல்ல..'! - ஈரான்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com