அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என அழுத்தம் கொடுப்பது. அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க சொல்லி இந்தியாவிற்க்கு அழுத்தம் கொடுப்பது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிப்பது போன்ற அமெரிக்காவின் நடவடிக்கைகளால் தற்காலத்தில் அமெரிக்கா - இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், இரு நாடுகளுக்கிடையேயான உறவை சரி செய்து நல்லுறவை மேம்படுத்த இந்தியா மற்றும் அமெரிக்கா என இரு நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன.
இந்த நிலையில் தான், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் ஆயுத பலத்தை அதகிகரிக்கும் விதமாக அமெரிக்கா பாகிஸ்தானின் பழமையான F -16 போர் விமானங்களை புதுப்பிப்பதற்க்காக இந்திய மதிப்பில் 5,700 கோடி அளிக்க முடிவு செய்துள்ளது.
ஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே பிரச்சனைகள் தீவிரமடைந்து தற்போது சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், பாகிஸ்தானின் ஆயுத பலத்தை அதகிகரிக்க உதவிக்கரம் நீட்டி இருக்கும் அமெரிக்காவின் இந்த செயல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
1978ம் ஆண்டு அமெரிக்க விமானப்படையால் அறிமுகப்படுத்தப்பட்ட F -16 ரக போர் விமானம், எதிரி நாடுகளின் வான் மற்றும் தரைவழி இலக்குகளை குறிவைத்து தாக்கி அழிக்கக்கூடியது. இந்திய விமானப்படையில் இதுவரை F -16 போர் விமானம் சேர்க்கப்படவில்லை. பாகிஸ்தான் விமானப்படை இதுவரை 75, F -16 போர் விமானத்தை வாங்கி இருக்கிறது. பாகிஸ்தான் F -16 போர் விமானம் மூலம் இந்தியாவை தாக்கினால் பாதிப்பு ஏற்படுமா என்றால், தாக்குதல் நிகழ்ந்தால் நிச்சயம் பாதிப்புகள் ஏற்படும். ஆனால், பாகிஸ்தானின் F -16 போர் விமானம் இந்தியாவை தாக்காமல் அதனை அழிக்கக்கூடிய மிக், ரஃபேல், தேஜாஸ் போன்ற போர் விமானங்களை இந்திய விமானப்படையும் தன் கைவசம் வைத்துள்ளது.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலின் எதிர் தாக்குதலின் போதும் , 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற பஹல்காம் தாக்குதலின், எதிர் தாக்குதலின் போதும் பாகிஸ்தான் F -16 போர் விமானங்களை பயன்படுத்தியபோது இந்தியா விமானப்படை F -16-னை சுட்டு வீழ்த்தியிருக்கிறது.
பாகிஸ்தானின் F -16 போர் விமானங்களை புதுப்பிப்பதற்கு ஒப்புதல் தான் அளிக்கப்பட்டுள்ளதே தவிர இந்த நடைமுறை இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. மேலும், இந்த ஒப்பந்தம் 30 நாள் மறுஆய்வு காலத்தை கொண்டுள்ளது. அதோடு சட்டமியற்றுபவர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.