Prince Harry Reuters
உலகம்

இளவரசர் ஹாரி அதிரடி முடிவு.. இங்கிலாந்து ராஜ குடும்பம் அதிர்ச்சி?

இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகையை அரச குடும்பத்துடன் கொண்டாட வேண்டாம் என்று இளவரசர் ஹாரி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்கலும், கடந்த 2018-ஆம் ஆண்டு அன்று, காதலித்து திருமணம் செய்துகொண்டனர். மேகன் மார்க்கல் ஒரு கருப்பின பூர்வீகத்தைக் கொண்டவர் என்பதாலும், ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்து பெற்றவர் என்பதாலும், இவர்களது திருமணம் குறித்து, சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே, கடந்த 2020-ஆம் ஆண்டு அன்று, இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் தங்களது ராஜ குடும்பத்தின் மூத்த பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவிததனர்.

Prince Harry and Meghan

மேலும், இனரீதியாக பெரும் சவால்களைச் சந்தித்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தனர். இவ்வாறு காதலுக்காகவும், தனது மனைவிக்காகவும், பெரும் பொறுப்பையே துச்சமென தூக்கி எறிந்த இளவரசர் ஹாரி, தற்போது மற்றொரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது, இங்கிலாந்தின் நார்ஃபோல்க் பகுதியில் உள்ள சான்ட்ரிங்ஹோம் மாளிகையில்தான், ராஜ குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில், இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்காவில் இருந்து தற்போது இங்கிலாந்துக்கு இவர்கள் குடிபெயர்ந்திருப்பதால், இவ்வாறு பல்வேறு தரப்பினரால் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. ஆனால், தற்போது வந்துள்ள தகவல்களின்படி, பிரிட்டன் அரச குடும்பத்தினருடன், வழக்கமான முறையில் அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட திட்டமிடவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், மேகனின் தாயார் டோரியா ராக்லேண்டுடன் கிறிஸ்துமஸைக் கொண்டாட அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொண்டாட்டம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Prince Harry

ஹாரிக்கும் அரச குடும்பத்தின் சில உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருவதால், சங்கடமான சூழலைத் தவிர்க்கவும், தனது மனைவியின் கன்னியத்தைக் காக்கவும், இந்த முடிவை அவர் எடுத்துள்ளாராம். மன்னர் சார்லஸ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் எதிர்காலத்தில் அமையலாம். ஆனால், இந்தக் கிறிஸ்துமஸ் அதற்கான சரியான தருணமாக இருக்காது என்று ஹாரி நினைப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.