உலகம்
”நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்”: மகள் லிலிபெட் டயானா குறித்து இளவரசர் ஹாரி நெகிழ்ச்சி
”நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்”: மகள் லிலிபெட் டயானா குறித்து இளவரசர் ஹாரி நெகிழ்ச்சி
இங்கிலாந்து அரச குடும்பத்தை சார்ந்த இளவரசர் ஹாரி தனது மகள் லிலிபெட் டயானா குறித்து இனிமையான தகவலை பகிர்ந்துள்ளார்.
ஹாரி - மேகன் மார்கெல் தம்பதியினருக்கு கடந்த ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது ஒரு மாத குழந்தை குறித்த தகவலை ஹாரி பகிர்ந்துள்ளார்.
“நாங்கள் இருவரும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். எங்கள் மகள் லிலிபெட் டயானா மிகவும் குளிர்ச்சியானவள் (Chill). ஆனால் எங்கள் மகன் ஆரச்சியை ஒரு இடத்தில் உட்கார வைப்பது மிகவும் கடினம். அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறான்” என ஹாரி தெரிவித்துள்ளார்.
அரச குடும்பத்திலிருந்து விலகிய தம்பதியர் இருவரும் தற்போது மேகனின் பூர்விகமான அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.