\
இளவரசர் ஹாரி- மேகன் தம்பதிக்கு பெண் குழந்தை

இளவரசர் ஹாரி- மேகன் தம்பதிக்கு பெண் குழந்தை

இளவரசர் ஹாரி- மேகன் தம்பதிக்கு பெண் குழந்தை
Published on: 

இளவரசர் ஹாரி- மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து அரச குடும்பத்தின் ஒப்புதலோடு திருமணம் செய்துக்கொண்டனர். பின்னர் கடந்த ஆண்டு அரசு குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த இவர்கள் தற்போது கலிபோர்னியாவில் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஏற்கெனவே ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ஹாரி- மேகன் தம்பதியர் தங்களுடைய இரண்டாவது குழந்தைக்கு லில்லிபெட் டயானா மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என பெயரிட்டுள்ளனர். இதில் டயானா என்பது ஹாரியின் தாயார் பெயர். லில்லிபெட் என்பது ராணி எலிசபெத்தை சிறுவயதில் அழைத்த பெயராகும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com