Gaza
Gaza PTI
உலகம்

"காஸாவில் தாக்குதல் தொடர்ந்தால்..." இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!

webteam

காஸாவில் மக்கள் அதிகம் வாழும் பகுதியான அல் சுதானியாவில் ஃபைட்டர் ஜெட்களைக் கொண்டு இஸ்ரேல் குண்டு மழை பொழிந்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. உணவு, நீர், மின்சாரம் என எல்லாவற்றையும் துண்டித்துவிட்டதால் இருளில் மூழ்கியிருக்கிறது காஸா. வான் வழி தாக்குதலுக்கு ஏதுவாக இருப்பதற்காக இஸ்ரேல் ராணுவம் வெளிச்சத்தை செயற்கையாக உருவாக்கியிருக்கிறார்களாம்.

israel - hamas war

காஸாவில் இஸ்ரேல் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் குற்றம் சாட்டியிருக்கிறது. காஸாவில் இஸ்ரேல் அரசு தரைவழி தாக்குதல் நடத்த முற்பட்டால், அதை தங்களால் தடுக்க முடியும் என அறிவித்திருக்கிறது ஹமாஸ். 'ஒருவேளை இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த ஆயுத்தமானால், எங்களின் அடுத்தக்கட்ட ஆப்ரேசனில் இறங்குவோம். அது இஸ்ரேலுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்' என வீடியோ வெளியிட்டிருக்கிறார் ஹமாஸின் ராணுவ அதிகாரியான அபு ஒபைதா.

பாலஸ்தீன எல்லையில் இஸ்ரேல் ராணுவம் எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்தாலும், வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்குமான இந்தப் போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களில் 50 சதவீதத்ததிற்கும் அதிகமானோர் குழந்தைகள்.

காஸாவில் மக்கள் அதிகம் வாழும் பகுதியான அல் சுதானியாவில் ஃபைட்டர் ஜெட்களைக் கொண்டு இஸ்ரேல் குண்டு மழை பொழிந்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுவரையில் 1,537 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

israel - palastine issue

அதில் 500 குழந்தைகளும், 276 பெண்களும் அடக்கம். காஸாவில் இஸ்ரேல் அரசு தாக்குதல் நடத்தியதில் 6612 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். காதுகளை பொத்திக்கொண்டு அழும் மகளை, தந்தை ஒருவர் காஸாவில் தூக்கிக்கொண்டு செல்லும் காட்சி பார்ப்போரின் மனதை கனத்துப் போகச் செய்யும்.

லெபனானின் தலைநகரான பெய்ரூட்டிற்கு வருகை தந்திருக்கும் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொஸீன் அமீர் அப்துல்லாஹின், “சவுதி அரேபியாவுடன் பாலஸ்தீனத்திற்கு எப்படி ஆதரவளிப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். காஸாவில் இப்படியான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால், போர் எல்லா பக்கமும் விரைவடைதற்கான வாய்ப்புகள் அதிகம்” என எச்சரித்திருக்கிறார்.