24 மணி நேர கெடு... என்ன செய்ய காத்திருக்கிறது இஸ்ரேல்..?

இன்னும் 24 மணி நேரத்தில் காஸா பகுதியில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் வெளியேற வேண்டுமென இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. காஸாவில் இஸ்ரேலிய அரசு இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இன்னும் 24 மணி நேரத்தில் வாடி காஸா பகுதியிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் வெளியேற வேண்டுமென அறிவித்திருக்கிறது இஸ்ரேல் அரசு. ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளுடன் வடக்கு காஸா ஸ்டிரிப்பில் 10 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனிய மக்கள் வசித்துவருகிறார்கள்.

24 மணி நேரத்துக்குள் அங்கிருந்து தெற்கு காஸா பகுதிக்கு செல்லுமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவுறுத்தியிருக்கிறது இஸ்ரேல் அரசு.

இஸ்ரேல் - காஸா போர்
இஸ்ரேல் - காஸா போர்

ஐக்கிய நாடுகள் சபை சார்பாக பள்ளிகள், மருத்துவமைகளில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீன மக்களையும் அப்புறப்படுத்துமாறு இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. 24 மணி நேரத்திற்குள் எப்படி 11 லட்சம் மக்களை வேறு இடத்துக்கு அனுப்ப முடியும் என விழிபிதுங்கி நிற்கிறது UN.

24 மணி நேரத்திற்குப் பின்னர், இந்தப் பகுதிகளில் தரை வழி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரேல் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காஸாவில் இஸ்ரேல் அரசு தரைவழி தாக்குதல் நடத்த முற்பட்டால், அதை தங்களால் திறம்பட தடுக்க முடியும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது ஹமாஸ்.

"ஒருவேளை இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த ஆயுத்தமானால் , எங்களின் அடுத்தக்கட்ட ஆப்பரேசனில் இறங்குவோம். அது இஸ்ரேலுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் " என வீடியோ வெளியிட்டிருக்கிறார் ஹமாஸின் ராணுவ அதிகாரியான அபு ஒபைதா. பாலஸ்தீன எல்லையில் இஸ்ரேல் ராணுவம் எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்தாலும், வான் வழித்தாக்குதலை மட்டுமே தற்போதுவரை நடத்திக்கொண்டிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் - காஸா போர்
இஸ்ரேல் - காஸா போர்

காஸாவில் இஸ்ரேலிய அரசு இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஏற்கெனவே உணவு, நீர், எரிபொருள் போன்றவற்றை காஸா பகுதிக்குள் அனுப்ப இஸ்ரேல் தடை விதித்திருக்கிறது. 50000 கர்ப்பிணி பெண்கள் காஸா பகுதிக்குள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி சிரமப்படுவதாக UN அறிவித்திருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com