அமெரிக்கா - ஈரான் போர் Pt web
உலகம்

மேற்காசியப் போரால் ஏழை நாடுகளுக்கு பாதிப்பு.. ஐநா எச்சரிக்கை.!

ஈரான் அமெரிக்க போரால் சூடான், ஏமன் மற்றும் லெபனான் போன்ற நாடுகளில் வறுமை விகிதங்கள் கணிசமாக அதிகரிக்கும் என்று ஐநா தெரிவித்துள்ளது.

PT WEB

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் மத்திய கிழக்கு முழுவதும் இருக்கும் அரபு நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதன் விளைவாக லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஒரு மாத கால போருக்குப் பிறகு அப்பகுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுமார் 3.7 முதல் 6 சதவீதம் வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 120 பில்லியன் டாலர் முதல் 194 பில்லியன் டாலர்களுக்கு இணையான மதிப்பாகும்.

iran

37 லட்சம் வேலைகள் பறிபோகும் என்றும், அப்பிராந்தியத்தில் மேலும் சுமார் 40 லட்சம் மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்படக்கூடும். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியை முடக்கியுள்ள இந்தப் போர், நீண்ட காலம் நீடித்தால் அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும். சிரியா, லெபனான் , ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீனம் , சூடான், ஏமன் போன்ற நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வறுமையை அதிகரிக்கும் என்றும் ஐநா கூறியுள்ளது.

பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி கொன்றதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, லெபனான் போரில் இழுக்கப்பட்டதால் லெபனான் , பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெறும் வான்வழித் தாக்குதல்களால் போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் பொதுச் சேவைகளில் பரவலான அழிவையும், அத்துடன் பெரிய அளவிலான இடப்பெயர்வையும் ஏற்படுத்தி வருகின்றன எனவும் ஐநா குறிப்பிட்டுள்ளது.

iran war

மேலும், வளைகுடா பகுதி கடல் பாதை எரிபொருள் போக்குவரத்துக்குமானது மட்டுமல்ல என்றும் ஏழை நாடுகளுக்கான உணவுகளையும் மருந்துகளையும் கொண்டு செல்லும் பாதையும் கூட என்றும் ஐநா தெரிவித்துள்ளது. உதாரணமாக சோமாலியாவுக்கு செல்லவேண்டிய ஊட்டச்சத்து உணவு பெட்டிகள் இந்தியாவிலேயே முடங்கியுள்ளதாக ஐநா கூறியுள்ளது.