டொனால்டு ட்ரம்ப், ஜோ கென்ட் எக்ஸ் தளம், ஏபி
உலகம்

“மனசாட்சினு ஒண்ணு இருக்கு..” - ஈரானுக்கு எதிரான தாக்குதல்.. ராஜினாமா செய்த ட்ரம்ப் நிர்வாக அதிகாரி!

அமெரிக்காவின் இந்தப் போருக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ள ட்ரம்ப் நிர்வாக அதிகாரி, தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.

Prakash J

ஈரான் மீதான தாக்குதலையும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. இந்தப் போரால் உலகம் முழுவதும் எரிவாயு, பொருளாதாரம் உள்ளிட்டவை சிக்கலைச் சந்தித்து வருகின்றன. இதையடுத்து, இந்தப் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து அந்நாட்டைச் சில்லுசில்லாகப் பெயர்த்து வருகிறது. தவிர, அந்நாட்டு உச்சபட்ச தலைவர் முதல் பலரையும் அழித்துள்ளது. இதற்கெல்லாம் பதிலடி கொடுத்துவரும் ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. அதேசமயம், ஈரான் மீதான தாக்குதலையும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. இந்தப் போரால் உலகம் முழுவதும் எரிவாயு, பொருளாதாரம் உள்ளிட்டவை சிக்கலைச் சந்தித்து வருகின்றன. இதையடுத்து, இந்தப் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

டொனால்டு ட்ரம்ப்

எனினும், இருதரப்பும் போரை நிறுத்தாது, தொடர்ந்து மாறிமாறி தாக்கி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் இந்தப் போருக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ள ட்ரம்ப் நிர்வாக அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.

அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநரான ஜோ கென்ட்-தான் இந்தப் போருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், இந்த மோதலைத் தன்னால் ஆதரிக்க முடியாது எனக் கூறியுள்ள அவர், தனது பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

ஜோ கென்ட்

இதுகுறித்து அவர், “ஈரானுக்கு எதிரான நிர்வாகத்தின் இராணுவ நடவடிக்கையைத் தன்னால் மனசாட்சிக்கு விரோதமாக ஆதரிக்க முடியாது. ஈரான் அமெரிக்காவுக்கு எந்த உடனடி அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. மேலும் இஸ்ரேலின் அழுத்தத்தின் காரணமாகவே அமெரிக்கா இந்தப் போரைத் தொடங்கியுள்ளது என்பது தெளிவாகிறது. ஈரானில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதையும், யாருக்காக அதைச் செய்கிறோம் என்பதையும் நீங்கள் சிந்தித்துப் பார்ப்பீர்கள் என்று நான் பிரார்த்திக்கிறேன். துணிச்சலான நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் இதுவே. நீங்கள் உங்கள் போக்கைத் திருப்பி, நமது தேசத்திற்கு ஒரு புதிய பாதையை வகுக்கலாம் அல்லது நம் தேசம் வீழ்ச்சியை நோக்கிச் செல்ல அனுமதிக்கலாம். எதுவென்றால்ம் முடிவெடுக்கும் அதிகாரம் உங்கள் கையில் உள்ளது” எனத் தெரித்துள்ளார்.