இந்தியா மீது தாக்குதல் நடத்த அணுகுண்டு சோதனையை நடத்திய சீனா web
உலகம்

இந்தியா மீது அணுகுண்டு வீச திட்டமா..? சீனாவின் செயலால் அதிர்ச்சி.. அமெரிக்கா சொன்ன பகீர் தகவல்!

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு மாநாட்டில் அமெரிக்காவின் Under Secretry தாமஸ் ஜி. டினானோ பேசியது உலகம் முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

PT WEB

ஜெனிவாவில் நடந்த ஐ.நா ஆயுதக் குறைப்பு மாநாட்டில் அமெரிக்க அதிகாரி தாமஸ் ஜி. டினானோ, இந்தியா-சீனா மோதலுக்குப் பிறகு சீனா அணுகுண்டு சோதனை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். சீனா, இந்த சோதனையை உலகளாவிய கண்காணிப்பில் இருந்து மறைக்க 'Decoupling' முறையைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

செய்தியாளர் - விக்கி

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு மாநாடு நடந்து வருகிறது. அதில் அமெரிக்காவின் Under Secretry தாமஸ் ஜி. டினானோ இந்தியா - சீனா இடையேயான கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு அணுகுண்டு சோதனையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அணுகுண்டு சோதனையை மேற்கொண்ட சீனா..

கடந்த 2022ஆம்‌ ஜூன் 15ஆம் தேதியன்று இந்தியா, சீனாவிற்கு இடையே தாக்குதல் நடந்த போது 20 இந்திய வீரர்களும், 30-க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் உயிரிழந்தனர். அப்போது இந்தியாவில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தாக்குதல் நடத்திய சீனா சில நாட்களுக்கு பிறகு அதாவது ஜூன் 22ஆம் தேதி அணுகுண்டு சோதனையை மேற்கொண்டதாக அதிரவைக்கும் தகவலை அமெரிக்காவின் Under Secretry தாமஸ் ஜி. டினானோ பகிர்ந்துள்ளார்.

அணுகுண்டு சோதனையை மேற்கொண்ட சீனா..

இந்தச் சோதனையை உலகளாவிய கண்காணிப்பு நிறுவனங்கள் கண்டுபிடிக்காமல் இருக்க, சீனா 'Decoupling' முறையைப் பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவின் எல்லையில் உள்ள சின்ஷியாங் மாகாணத்திலுள்ள லூப் நூர் என்ற இடத்தில் இது நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்தச் சோதனையில் சீனா சர்வதேச அணு ஆயுதக் கொள்கைகளை மீறியது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

அணுகுண்டு சோதனையை மேற்கொண்ட சீனா..

ஆனால் சீனாவின் தரப்பில், "அணு ஆயுத விஷயத்தில் அமெரிக்கா தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வருகிறது. இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக எதிர்க்கிறது. அணு ஆயுத பந்தயத்தில் அமெரிக்கா தான்‌ முக்கிய குற்றவாளி" என்று மறுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க செயலாளரின் இந்த கருத்து இந்தியாவுடனான சீனாவின் மோதல் வலுப்பெறும் பட்சத்தில் அந்நாடு அணுஆயுத தாக்குதல் நடத்தவும் தயாராக இருந்ததை காட்டுகிறது.