america gun fire
america gun fire file image
உலகம்

16 பேரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்.. அமெரிக்காவை அதிரவைத்த பகீர் சம்பவம்!

யுவபுருஷ்

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான மெய்னில் உள்ள லெவிஸ்டன் நகரில் சுமார் 39,000 பேர் வசித்து வருகின்றனர். அங்கிருக்கும் பார், வால்மார்ட் விநியோக மையம் மற்றும் உணவகம் என்று மூன்று வெவ்வேறு இடங்களில் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

56 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த லெவின்ஸ்டன் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடானது 2019ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த கொடூரமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபரின் ஃபோட்டோவை வெளியிட்ட காவல்துறையினர், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

கையில் நீளமான துப்பாக்கியை ஏந்தியபடி கொலைவெறி தாக்குதல் நடத்திய இந்த நபர் குறித்த தகவல்கள் கிடைத்தால் போலீஸுக்கு தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து அதிபர் ஜோ பைடனிடம் அதிகாரிகள் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருவதாகவும் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும் பலி எண்ணிக்கை 22 ஆக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.

உலக மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் மட்டுமே அமெரிக்காவில் வாழும் நிலையில், இந்த ஆண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை மட்டும் நடந்த துப்பாக்கிச்சூடுகளில் சுமார் 25,000 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரம் ஒன்றில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.