செய்தியாளரின் குடும்பத்தைக் கொன்ற இஸ்ரேல்... வலுக்கும் கண்டனம்..!

அல்ஜஸீரா அரபிக் செய்திப் பிரிவின் தலைமை செய்தியாளரான வைல் டாடௌவின் ஒட்டுமொத்த குடும்பமும் இஸ்ரேல் தாக்குதலில் பலியாகியிருப்பது பெரும் சோகத்தை உண்டாக்கியிருக்கிறது.
 வைல் டாடௌவ்
வைல் டாடௌவ்x வலைதளம்

அல்ஜஸீரா அரபிக் செய்திப் பிரிவின் தலைமை செய்தியாளரான வைல் டாடௌவின் ஒட்டுமொத்த குடும்பமும் இஸ்ரேல் தாக்குதலில் பலியாகியிருப்பது பெரும் சோகத்தை உண்டாக்கியிருக்கிறது.

இச்சம்பவத்துக்கு அல்ஜஸீரா செய்தி நிறுவனமும், பல சர்வதேச ஊடகங்களும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். காஸாவில் பாதுகாப்பான பகுதியில் வசித்துவந்த செய்தியாளரின் மனைவி, மகன், மகள், பேரன் என தன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து நிற்கிறார் வைல் டாடௌ. மற்ற உறவினர்களின் சிலர் குண்டுகளால் தகர்க்கப்பட்ட அந்த கட்டடத்தில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.

காஸாவின் தெற்குப் பகுதி
காஸாவின் தெற்குப் பகுதி

‘காஸாவின் தெற்குப் பகுதிதான் இப்போதைக்கு பாதுகாப்பானது. அங்கே அனைவரும் செல்லுங்கள்’ என இஸ்ரேல் அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அதை நம்பி, காஸாவின் தெற்குப் பகுதிக்குச் சென்று, அங்கிருக்கும் பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் புகுந்தவர்கள் மீதுதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என சொல்லப்படுகிறது.

தனது தந்தையைப் போலவே பத்திரிகையாளராக வேண்டும் என்று விரும்பிய அவரது 15 வயது மகன் மஹ்மூத்தின் முகத்தை வைல் டாடௌ தொட்டு அழுத காட்சி பார்ப்போர் நெஞ்சை உலுக்குகிறது. நூஸ்ரட் கேம்ப்பில் இருந்த அவரின் 7 வயது மகளின் இறந்த உடலுடன் வைல் பேச முயன்ற காட்சியும் யாரையும் அசைத்துப் பார்த்துவிடும்.

 வைல் டாடௌவ்
உலக நாடுகள் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு காரணம் என்ன?

அல்ஜஸீராவுக்கு பேட்டியளித்த வைல் டாடௌ, "என்ன நடந்தது என தெரியவில்லை. குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் என போருக்கு சற்றும் சம்பந்தமில்லாதவர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். வேறொரு இடத்திலிருந்து இப்படியானதொரு சம்பவத்தைத்தான் செய்தியாக சேகரித்துக்கொண்டிருந்தேன்.

ஆனால், நூஸ்ரட்டிலும் அதேமாதிரியான படுகொலையை நிகழ்த்தியிருக்கிறது இஸ்ரேல். இஸ்ரேல் ராணுவம் மீண்டும் மீண்டும் சொன்ன பாதுகாப்பான இடம்தான். இந்த மக்களை துன்புறுத்தாமல், இஸ்ரேல் இந்த இடத்தை ஆக்கிரமிக்காது என பலமுறை சொல்லி வந்தோம். அதுதான் தற்போது நடந்துகொண்டிருக்கிறது"

வைல் டாடௌவின் இரண்டு வயது பேரன், இரண்டு மணி நேர மருத்துவ போராட்டத்திற்குப் பிறகு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறான். வாடி காஸாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் கேம்ப்பில் இருந்த 2 வயது பேத்தியும், இன்னும் சிலரும் மட்டுமே வைல் டாடௌ குடும்பத்தில் தற்போது மீதம் இருப்பவர்கள்.

 வைல் டாடௌவ்
"ஹமாஸின் தாக்குதல் ஒரு எதிர்வினைதான்" - ஐநா பொதுச்செயலாளர் கருத்தால் கடும் கோபமடைந்த இஸ்ரேல்!

டாடௌவின் சக பத்திரிகையாளரான யோம்னா எல்சயீத், நிகழ்ந்த இந்த கோரச் சம்பவம் பற்றிக் கூறுகையில், " அவர் அனைவரையும் சாந்தப்படுத்தக்கூடிய நபர். தலைமை செய்தியாளர் போல் அல்லாமல், ஒரு மூத்த சகோதரனைப் போலவே எங்களிடம் நடந்துகொள்வார். அவர் காஸா நகரை விட்டு வெளியேறவே இல்லை. 19 நாட்களாக காஸாவிலேயே இருந்து அங்கு நடக்கும் செய்திகளை உலகுக்கு சொல்லி வந்தார்.

'காஸாவில் மக்கள் குண்டுகளால் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அதை நான் செய்தியாக சொல்ல வேண்டும்' என சொல்லிக்கொண்டு இருப்பார்.

அவர் இந்த மக்களை ஒருநாளும் கைவிட்டதில்லை. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர் அந்த மக்களைவிட்டும், காஸாவை விட்டும் வெளியேறவில்லை" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com