எலான் மஸ்க், ஆப்பிள் எக்ஸ் தளம்
உலகம்

ஆப்பிளுக்குத் தடை| எலான் மஸ்க் பகிர்ந்த மீம்.. வைரலைத் தொடர்ந்து நன்றி சொன்ன நடிகர்!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுக்குள் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Prakash J

ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏ.ஐ நிறுவனம் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் போன்கள் மற்றும் செயலிகளில் ஆப்பிள் இண்டலிஜென்ஸ் புகுத்தப்படும் என்றும் சாட்ஜிபிடி சேவையும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எலான் மஸ்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்

தனக்கென தனியாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன் ஏஐ மூலம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தும் என்பது அபத்தமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிள் நிறுவனம், ஓபன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ஓ.எஸ். அளவில் ஒருங்கிணைத்தால் தனது நிறுவன வளாகங்களில் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”பும்ரா பெயரைக் கேட்டாலே பயம்” - பாகிஸ்தான் பேட்டர்களைச் சாடிய வாக்கார் யூனிஸ்!

ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து மக்களுடைய தரவுகள் எப்படி ஓபன் ஏஐக்கு விற்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் தளத்தில் மீம்ஸ் ஒன்றை பதிவு செய்திருந்தார்.

தமிழில் 2017-ஆம் ஆண்டு வெளிவந்த ‘தப்பாட்டம்’ என்ற படத்தின் வைரல் மீம் ஒன்றைவைத்து இந்த தொழில்நுட்பத்தை எலான் மஸ்க் எளிய மக்களுக்கும் புரிய வகையில் பகிர்ந்து ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.

இதற்கிடையே வைரலான இந்த மீம் குறித்த அப்படத்தில் நடித்த நடிகர் துரை சுதாகர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “எலான் மஸ்க் இதனை பகிர்ந்துள்ளதன் மூலம் உலகம் முழுவதும் பரவியுள்ளதோடு, தமிழ் திரைப்பட காட்சி உலக அளவில் முத்திரை பதித்துள்ளது.

தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த மீம் டெம்ப்ளேட் தற்போது எலான் மஸ்க் வரை சென்று உலக அளவில் பிரபலம் அடைந்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

எலான் மஸ்க்கின் அணியில் ஏஐ அணியில் தமிழர்கள் சிலர் பணிபுரிவதால், அவர்கள் இந்த டெம்ப்ளேட்டை எலான் மஸ்க்கிடம் பரிந்துரைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனை வெளியிட்ட எலான் மஸ்க் மற்றும் சமூக வலைதளங்களில் இதனை உலகறிய செய்தவர்களுக்கு நன்றி ” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சீனாவுக்குப் பதிலடி|திபெத்தில் 30 இடங்களுக்குப் பெயரை மாற்றும் இந்தியா!