பும்ரா, வாக்கார் யூனிஸ்
பும்ரா, வாக்கார் யூனிஸ்எக்ஸ் தளம்

”பும்ரா பெயரைக் கேட்டாலே பயம்” - பாகிஸ்தான் பேட்டர்களைச் சாடிய வாக்கார் யூனிஸ்!

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவைப் பார்த்து பாகிஸ்தான் பேட்டர்களுக்குப் பயமிருப்பதாக அந்நாட்டு முன்னாள் ஜாம்பவான் வாக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

2024 டி20 உலகக் கோப்பை தொடரில், கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்தியா திரில் வெற்றிபெற்றது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பங்கும் முக்கியக் காரணம்.

அந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 14 ரன்களை விட்டுக்கொடுத்து, பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இப்திகார் அகமது ஆகிய 3 முக்கிய விக்கெட்களைச் சாய்த்தார். இதையடுத்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

பும்ரா
பும்ரா

தன்னுடைய பந்துவீச்சு மூலம் இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத் தந்த பும்ராவைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தான் ஜாம்பவான் வாக்கார் யூனிஸ் பும்ராவை புகழ்ந்துள்ளார்.

இதையும் படிக்க: சபாநாயகர் பதவி| போட்டிபோடும் கூட்டணிக் கட்சிகள்.. தேர்வாகிறாரா ஆந்திராவை அலறவிட்ட புரந்தேஸ்வரி?

பும்ரா, வாக்கார் யூனிஸ்
IND vs PAK | டி20 உலகக்கோப்பை | பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது இந்திய அணி!

இதுகுறித்து அவர், ”நான் பல ஜாம்பவான்களுடன் விளையாடி இருக்கிறேன். ஆனால், பும்ராவின் பந்துவீச்சு மிகவும் தனித்துவமானது. பாகிஸ்தான் வீரர்களால் பும்ராவின் ஃபுல்டாஸ் பந்துகளைக்கூட அடிக்க முடியாதது ஏன்? ஏனெனில், அவரது பெயரைக் கேட்டாலே அவர்களுக்கு இருக்கும் அச்சம்தான் காரணம்.

பும்ரா பேட்டர்களின் மனதில் பயத்தை விதைத்து இருக்கிறார். அவர் ஃபுல்டாஸ் வீசினால்கூட பேட்ஸ்மேன்களுக்கு அதை அடிக்க கடினமாக உள்ளது.

ஏனெனில், அவர்கள் அதை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அவரது சாட்டை சுழற்றுவது போன்ற பந்து வீசும் முறை மற்றும் கைகளை எத்தனை தூரம் பின்னே கொண்டுசென்று வீச முடியுமோ, அப்படி வீசுகிறார். அப்படி வீசும் பந்துகளை அடித்து ஆடுவது என்பது மிகவும் கடினம். பும்ரா ஒரு திறமைசாலி. அவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் சிறப்பாக பந்துவீசக் கூடியவர். அவர் பந்துவீச்சில் அனைத்தையும் சரியாக செய்கிறார். அவர் உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்" என்று புகழ்ந்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் இறுதியில் யார்க்கர் பந்து வீச முயன்ற பும்ரா, தவறுதலாக ஃபுல்டாஸ் பந்துகளை வீசினார். அதுபோல இரண்டு ஃபுல்டாஸ் பந்துகளை ஒரே ஓவரில் வீசினார். பொதுவாக கடைசி ஓவர்களில் ஃபுல்டாஸ் வீசினால் அதை எந்த ஒரு பேட்டராக இருந்தாலும் சிக்ஸர் அடிக்கவே முயற்சி செய்வார்கள். ஆனால், பும்ரா வீசிய ஃபுல்டாஸ் பந்துகளில்கூட பாகிஸ்தான் பேட்டர்கள் ரன் குவிக்க முயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மத்திய அமைச்சர் பதவி| அதிருப்தியில் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே

பும்ரா, வாக்கார் யூனிஸ்
‘ஒவ்வொரு ரன்னும், ஒவ்வொரு பந்தும் முக்கியம் பிகிலு’ - IND vs PAK போட்டியில் ஆட்டம் காண்பித்த மைதானம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com