விமான பயணி
விமான பயணி PT
உலகம்

விமானத்தில் திடீரென வினோதமாக கத்திய பெண்.. போலீசார் கைது செய்ய முயன்றபோதும் கலாட்டா - வீடியோ

Jayashree A

அமெரிக்காவின் உள்ள வேகாஸ் நகரிலிருந்து கடந்த மார்ச் 23ம் தேதி ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்த நேரத்தில், விமானத்தில் பயணித்த ஒரு பெண் பயணி வினோதமான முறையில் நடந்து கொண்டார். அவரை போலிசார் கைது செய்து அங்கிருந்து அகற்ற முயன்றனர். இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

டிக்டாக் செயலியில் வெளியான இந்த வீடியோவில் ஒரு பெண் பயணி மிகவும் ஆக்ரோஷமாக, வெறித்தனம் கொண்டது போல் கத்துகிறார். அவரை வலுக்கட்டாயமாக போலிசார் கைது செய்கிறார்கள். என்ன விஷயம் எதற்காக இப்படி நடந்தது? அப்பெண்ணின் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பது அதில் தெளிவாகவில்லை.

ஆனால் அப்பெண்ணை போலிசார் கைதுசெய்யும் போது ”நான் கவலை அடைவது சுதந்திரத்திப்பற்றி” என்று கத்துகிறாள்.

போலிசாரும் அவளிடம், “நாங்கள் உங்களை கைது செய்கிறோம்” என்றதற்கு,

“அப்படியா, அது நல்லதுதான். நான் இதற்கெல்லாம் பயப்படமாட்டேன்” என்றவர், பின்பு, மொபைலில் வீடியோ எடுக்கும் நபர்களைப்பார்த்து ”போலிசார் என்னை துன்புறுத்துகிறார்கள்” என்று கூறி அழவும் ஆரம்பிக்கிறார்.

இத்தகைய செயல்களை பார்க்கும் பொழுது, அப்பெண் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணா எனவும் தோன்றுகிறது.

ஸ்பிரிட் ஏர்லைன்ஸில் இது போல நடப்பது இது ஒன்றும் புதிதல்ல, இது போல பல அனுபவத்தை இந்த ஏர்லைன்ஸானது கண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு பயணி இருக்கைக்கு மேல் எழுந்து நின்று குதித்துக்கொண்டிருந்தார். உடனடியாக அவர் விமானத்திலிருந்து இறக்கப்பட்டார்.

அதே போல கடந்த ஆண்டு கர்ப்பிணி விமான பயணி ஒருவர் விமான ஊழியரை தாக்கிய சம்பவமும் நடந்தது.

இதையெல்லாம் விட ஹைலைட்டாக ஒரு சம்பவம் பயணிகளை திகைக்கவைத்தது. 2023ல் விமானம் புறப்படுவதற்கு முன்னதாக, ஒரு விமான ஊழியர் ஒருவர் விமானத்தின் இறக்கைகளை தட்டி சரி செய்ததுடன், இறக்கைகளின் குறுக்கே டேப்புகளை ஒட்டி சரிசெய்ததை பார்த்த பயணிகள் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றனர்.