Swiggy ஆர்டரை கேன்சல் செய்ய நினைத்தவரிடம் Scam... 3 லட்சம் பணத்தை இழந்த முதியவர்! என்ன நடந்தது?

ஸ்விக்கி கஸ்டமர் கேர் என்ற பெயரில், தன் தந்தை ஏமாற்றப்பட்டுள்ளதாக இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார்.
Swiggy
Swiggy X account

இந்த நவீன உலகத்தில், நமக்கு தேவையான பொருட்கள், உணவுகளை கடை கடையாக தேடிச்சென்று நாம் வாங்கத்தேவையில்லை. வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும். பொருட்கள் வீடுதேடி வந்துவிடும். இதில் பல சௌரியங்கள் இருப்பினும் சங்கடங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

அந்தவகையில் உலகம் முழுவதிலும் ஆன்லைனில் பல மோசடிகள் தினமும் நடந்துக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் பலர் தங்கள் பணத்தை இழந்துகொண்டே இருக்கின்றனர். இதுபோன்ற சம்பவம் ஒன்றினில் தன் தந்தை ஏமாற்றப்பட்டதை தனது இன்ஸ்டா தளத்தில் இன்ஃப்ளூயென்சர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Swiggy
கோடீஸ்வரர்கள் பட்டியல் | இந்தியளவில் No 1-ஆக முகேஷ் அம்பானி.. உலக பட்டியலில் புதிதாக 25 இந்தியர்கள்!

அதன்படி, நிகில் சாவ்லா என்ற இன்ஸ்டா இன்ஃப்ளூன்சர் மற்றும் Food Vlogger தனது தந்தை swiggy customer service scam ஒன்றினால் ஏமாற்றப்பட்ட கதையை அவரது இன்ஸ்டா தளத்தில் சொல்லியுள்ளார்.

அதில் அவர், “எனது தந்தை மலேசியா கோலாலம்பூரில் வசித்து வருகிறார். அவர் தனது உணவு ஒன்றை ஸ்விக்கியில் ஆர்டர் செய்திருந்தார். ஆனால் அது சரியான நேரத்திற்கு கிடைக்கவில்லை. ஆகையால் வெறுப்புற்ற அவர் ஸ்விக்கியை தொடர்புகொண்டு ஆர்டரை கேன்சல் செய்வதற்காக கூகுளில் வாடிக்கையாளர் சேவையை தேடியுள்ளார். அப்பொழுது, The swiggy call centre என்ற பெயரில் தொலைபேசி எண்ணொன்று அவருக்கு கிடைத்துள்ளது. அதில் தொடர்பு கொண்ட என் தந்தை தான் ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்யுமாறு கூறியுள்ளார். உடனடியாக அவரது வங்கி கணக்கிலிருந்து இந்திய மதிப்பில் 35,000 ரூபாய் திருடப்பட்டுவிட்டது.

தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்துக்கொண்ட என் தந்தை , மறுபடியும் அந்த எண்ணை அழைத்து, தன்னுடைய பணத்தை திருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளார். ஆனால் எதிர்தரப்பில் பேசிய ஏமாற்று பேர்வழி சில நிமிடங்களில் என் தந்தையின் எண், அவரது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டை ஸ்கேன் செய்து மீண்டும் 3 லட்சத்தை திருடியுள்ளார். மலேசியாவில் இருப்பவர்கள் என் தந்தைக்கு உதவ வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.

இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள ஸ்விக்கி நிறுவனம், “ஹலோ நிகில், ஸ்விக்கியிடம் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை எண் என எதுவும் இல்லை. ஆர்டர் தொடர்பான எந்த எந்தவொரு சிக்கலுக்கும் எங்களின் செயலியில் உள்ள chat support-ஐ மட்டும் பயன்படுத்தவும். தற்போது சைபர் கிரைம் அதிகாரிகளிடம் இந்த விஷயத்தைப் புகாரளிக்கவும். மேலும் உங்களுக்கு எங்கள் தரப்பில் இருந்து ஏதேனும் தகவல் வேண்டுமானாலும் வழங்க நாங்கள் தயார்” என்றுள்ளது.

இப்பதிவில் சைபர் க்ரைம் காவல்துறையையும், டெல்லி காவல்துறையையும் டேக் செய்துள்ளார் நிகில். தொடர்ந்து புகாரும் அளித்துள்ளார்.

(குறிப்பு : உணவு, உடை என நீங்கள் எது ஆர்டர் செய்தாலும் அந்த செயலி / வலைதளத்தில் உள்ள கஸ்டமர் சப்போர்ட் ஆப்ஷனை மட்டுமே பயன்படுத்தவும். கூகுள் அல்லது வேறு தேடுபொருள்கள் மூலம் கிடைக்கும் எண்களை பயன்படுத்த வேண்டாம்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com