கவுகாத்தி: மின்னல் தாக்கியதில் விமானநிலையத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து; உயிர் தப்பிய பயணிகள்!

கவுகாத்தியில் நேற்று வானிலை மாற்றத்தால் திடீரென்று பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழைப்பெய்துள்ளது. கவுகாத்தியின் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டின் வெளிப்பகுதியில் மழையில் நனையாமல் இருக்க சில பயணிகள் ஒதுங்கி இருந்தனர்.
ஏர்போர்ட்
ஏர்போர்ட்PT

கௌஹாத்தியில் செயல்பட்டு வரும் லோக்ப்ரியா கோபிநாத் போர்டோலி இண்டர்நேஷனல் ஏர்போர்டில் மின்னல் தாக்கியதில், ஏர்போர்ட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.

கவுகாத்தியில் நேற்று வானிலை மாற்றத்தால் திடீரென்று பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழைப்பெய்துள்ளது. மழையில் நனையாமல் இருக்க சில பயணிகள் கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் ஒதுங்கி இருந்தனர்.

மழையினால் ஏற்றப்பட்ட மின்னல் ஒன்று பயணிகள் ஒதுங்கியிருந்த பகுதியின் மேற்கூரையை தாக்கியுள்ளது. இதில் மேற்கூரையானது இடிந்து விழுந்து மழைநீர் உட்புகுந்தது. ஆனால் இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயமில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வானிலை மாற்றம் காரணத்தால், சில விமானங்கள் தரையிரங்க தாமதமானதாகவும், சிலவிமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com