வங்கதேசத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்று ஆய்வாளர்கள் விவரிக்கும் இந்தத் தேர்தலில் 127 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யத் தகுதி பெற்றுள்ளனர்.
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2024ஆம் ஆண்டு மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது. அதேநேரத்தில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு வங்காளதேசத்தில் பதிவு செய்யபட்டுள்ளது. அவருக்கு எதிராக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வங்கதேசத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்று ஆய்வாளர்கள் விவரிக்கும் இந்தத் தேர்தலில் 127 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யத் தகுதி பெற்றுள்ளனர்.
அதேநேரத்தில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கட்சி இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தேர்தலில் பிஎன்பி கட்சிக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான கூட்டணிக்கும் இடையிலான இருமுனைப் போட்டியாக பரவலாகக் காணப்படுகிறது. அதிலும் வங்கதேச தேசியக் கட்சியின் தலைவரான தாரிக் ரகுமான் பிரதமருக்கான ரேஸில் முன்னணியில் உள்ளார். இவர், மறைந்த முன்னாள் பிரதமரும் வங்கதேச தேசிய கட்சி தலைவருமான கலிதா ஜியாவின் மகன் ஆவார்.
இதற்கிடையே, இன்னும் 3 நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய வன்முறை வெடித்துள்ளது. இரவு நேர ஜமாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு ஜமாத்-இ-இஸ்லாமி பணம் விநியோகித்ததாக பிஎன்பி தொழிலாளர்கள் குற்றம்சாட்டியதை அடுத்து வன்முறை வெடித்தது. இந்த மோதலில் பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுவதும் தாக்கப்படும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இன்குலாப் மோஞ்சோ தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி, டாக்காவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டு உயிரிழந்த பிறகு, வங்கதேசத்தில் வன்முறைக்கு மீண்டும் வழிவகுத்தது.